முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பொங்கல் பண்டிகைக்கு பிறகு போக்குவரத்து துறையில் காலி பணியிடங்கள் நிரப்பப்படும்: அமைச்சர் ராஜகண்ணப்பன் தகவல்

செவ்வாய்க்கிழமை, 4 ஜனவரி 2022      தமிழகம்
Image Unavailable

பொங்கல் பண்டிகையின் பரிசு தொகுப்பு பணமாக வழங்காமல் பொருட்களாக வழங்குவதால் மக்களுக்கு பயனுள்ளதாக அமைகிறது என  தெரிவித்த அமைச்சர் ராஜகண்ணப்பன், பொங்கல் பண்டிகைக்கு பிறகு போக்குவரத்து  துறையில் காலி பணியிடங்கள் நிரப்பப்படும் என்றார்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்களுக்கு தமிழக அரசு அறிவித்துள்ள பொங்கல் பரிசு தொகுப்பை 20 மளிகை பொருட்கள் ஒரு கரும்பு அடங்கிய தொகுப்பை பரமக்குடியில் போக்குவரத்து துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் வழங்கி, தொடங்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில், ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர்களை பச்ச முத்துராமலிங்கம், பரமக்குடி சட்டமன்ற உறுப்பினர் முருகேசன் மற்றும் அரசு அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய போக்குவரத்துத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன், சென்னையில் மட்டும் 2,800 பேருந்துகள் கேமரா பொருத்தப்பட்டு இயக்கப்பட உள்ளது. பொங்கல் பண்டிகை முடிந்த பிறகு போக்குவரத்து துறையில்  ஊழியர்கள் நிரப்பப்பட உள்ளனர். காலி பணியிடங்கள் அனைத்தும் நிரப்பப்படும்.

முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர் விரைவில் கைது செய்வர். பொங்கல் பண்டிகையின் பரிசு தொகுப்பு பணமாக வழங்காமல் பொருட்களாக வழங்குவதால் மக்களுக்கு பயனுள்ளதாக அமைகிறது” என்று கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து