முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சிவகாசி அருகே நடந்த பட்டாசு ஆலை வெடி விபத்து : பலி எண்ணிக்கை 5 ஆக உயர்வு

செவ்வாய்க்கிழமை, 4 ஜனவரி 2022      தமிழகம்
Image Unavailable

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே பாறைப்பட்டியில் உள்ள ஆர்.வி.பட்டாசு ஆலையில் நிகழ்ந்த வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5-ஆக உயர்ந்துள்ளது. பட்டாசு வெடி விபத்தில் படுகாயமடைந்த முடியாண்டி(34) மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

கடந்த ஜனவரி 1-ம் தேதி சிவகாசி அருகே உள்ள பாறைப்பட்டியில் வழிவிடு முருகன் என்பவரது பட்டாசு ஆலையில் அதிகளவு ஃபேன்சி ரக பட்டாசு தயாரிக்க மருந்து தயார் செய்த போது விபத்து நிகழ்ந்துள்ளது. இதில் பட்டாசுகள் வெடித்து இரண்டு அறைகள் தரைமட்டமானது. சுமார் 30 தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டிருந்த போது பட்டாசுகள் வெடித்து சிதறியதால் விபத்து என தகவல் வெளியானது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் போராடி தீயை அணைத்தனர்.

பட்டாசு மூலப்பொருட்கள் கலக்கும் போது, உராய்வு ஏற்பட்டு வெடி விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதில் 4 பேர் உயிரிழந்த நிலையில் 2 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். 

இந்நிலையில் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த முடியாண்டி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மேலும் விபத்து நிகழ்ந்த அன்றே உரிய பாதுகாப்பின்றி ஆலையை இயக்கியதாக உரிமையாளர் வழிவிடு முருகன் மீது 7 பிரிவுகளில் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து