முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழகத்தில் 12-ம் தேதி வரை லேசான மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்

வியாழக்கிழமை, 6 ஜனவரி 2022      தமிழகம்
Image Unavailable

தமிழகத்தில் ஒரு சில இடங்களில் 12-ம் தேதி வரை லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ள சென்னை வானிலை மையம், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் உள் மாவட்டங்களில் காலை நேரங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும் என்றும் சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடர்ந்து பெய்துவருகிறது. கடந்த ஆண்டு பொங்கல் பண்டிகை காலத்தில் வடகிழக்கு பருவமழை தமிழகத்தில் விலக்கிக்கொள்ளப்பட்டது. இந்த வருடமும் அதே போல பருவமழை ஜனவரி 2-வது வாரம் வரை நீடிக்கும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது:-

பொதுவாக இந்த மாதத்தில் வறண்ட வானிலையே காணப்படும். படிப்படியாக மழை குறைந்து இந்த மாத மத்தியில் பருவமழை முடிவதற்கான வாய்ப்பு இருக்கிறது. தமிழகம் முழுவதும் லேசான மழை பரவலாக பெய்து வருகிறது. கடலோர பகுதிகளில் மழை நீடிக்கிறது. 8-ம் தேதி முதல் கடலோர பகுதிகளில் மழை அதிகரிக்கக்கூடும்.

ஒரு குறைந்த காற்றழுத்தத்தின் காரணமாக தென் கடலோர மாவட்டங்கள் மற்றும் வடகடலோர மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. ஜனவரி 12-ம் தேதி வரை தமிழகத்தில் ஒரு சில இடங்களில் மழை பெய்யக் கூடும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

பல மாநிலங்களில் வடகிழக்கு பருவமழை முடிந்துவிட்ட நிலையில் தமிழகத்தில் இன்னும் பெய்து வருகிறது. பருவமழை விலக்கிக்கொள்ளப்பட்டதாக சென்னை வானிலை மையம் இதுவரை அறிவிக்கவில்லை. மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் உள் மாவட்டங்களில் காலை நேரங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும் என்றும் சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 6 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து