முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆக்சிஜன் உற்பத்தியை அதிகரிக்க மத்திய, மாநில அரசுகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்: முன்னாள் எம்.பி. முத்துமணி கோரிக்கை

வெள்ளிக்கிழமை, 7 ஜனவரி 2022      தமிழகம்
Image Unavailable

ஆக்சிஜன் உற்பத்தியை அதிகரிக்க மத்திய, மாநில அரசுகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முன்னாள் எம்.பி. முத்துமணி கோரிக்கை விடுத்துள்ளார். 

இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், 

கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா தொற்றால் மக்கள் பெரும் இன்னலுக்கு ஆளாகி உள்ளனர். இந்த நிலையில் தற்போது ஒமைக்ரான் வைரசும் பரவி வருகிறது. இயற்கை வளங்களை சீராக பராமரிக்காமல் அவைகளை சிதைத்து வருவதே இதற்கான அடிப்படை காரணம் என்பதை உலக ஆராய்ச்சியாளர்கள் பிரகடனப்படுத்தி வருகின்றனர். மனித குலத்திற்கு அடிப்படை தேவையானது ஆக்சிஜன்.  18 மனிதனுக்குரிய ஆக்சிஜனை ஒரு மரம் உற்பத்தி செய்கிறது. எனவே காடுகளை வளர்க்க அரசு முனைப்பு காட்டி வருகிறது. அதோடு அதனை வளர்ப்போருக்கும் அரசு ஊக்கம் அளிக்க வேண்டும். நாடு முழுவதும் ஆக்சிஜன் உற்பத்தியை அதிகரிக்க வேண்டும். 

விவசாய நிலங்களில் தூவப்பட்டு வரும் ரசாயன உரங்களும், பூச்சிக்கொல்லிகளும் நிலங்களை மலட்டுத் தன்மைக்கு மாற்றி வருகின்றன. இன்றைக்கு நாம் சுவாசிக்கும் காற்று மாசுபட்டு, உற்பத்தி உணவுப் பொருட்கள் விஷமாகவும் மாறி வருகின்றன. ஆகவே இயற்கை விவசாயத்திற்கு விவசாயிகள் மாற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் வளிமண்டல வெப்பமயமாதலில் ஆக்சிஜன் குறைந்து வருகிறது. ஆக்சிஜன், ஹைட்ரஜன் சேர்க்கை குறைவால் மழை பெய்வதும் குறைந்து வருகிறது. இந்த மழை குறைவால் பூமி வெப்பமாகி வெப்ப நோய் பரவுகிறது. உலகின் மிக பெரிய ஆறுகளில் ஒன்றான பிரமபுத்ரா நதியில் நீர்வரத்து குறைந்து விட்டது என பன்னாட்டு நிறுவன அறிக்கை கூறுகிறது. எனவே நாடு முழுவதும் வெப்பநிலையை குறைக்க நடவடிக்கை தேவை. 

ஆக்சிஜன் தயாரிப்புக்கு முன்னுரிமை தந்து மனித குலம் வாழ ஆக்சிஜனை தயாரிக்க மத்திய, மாநில அரசுகள் போர்க்கால நடவடிக்கை எடுக்க வேண்டும். இயற்பியல் அறிவை மாணவ செல்வங்களுக்கு பாடமாக கொண்டு வர வேண்டும். சுற்றுச்சூழலை பாதுகாக்க உரிய சட்டங்களும், திட்ட அமலாக்கங்களும் பிறப்பிக்கப்பட வேண்டும். இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து