முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தடுப்பூசி மற்றும் முக கவசம் கட்டாயம்: சென்னை புறநகர் ரெயில்களில் பயணிக்க புதிய கட்டுப்பாடுகள்

சனிக்கிழமை, 8 ஜனவரி 2022      தமிழகம்
Image Unavailable

தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும், முக கவசம் கட்டாயம் அணிந்திருக்க வேண்டும்,  இல்லையெனில் அபராதம் விதிக்கப்படும் என்று சென்னை புறநகர் ரெயில்களில் பயணிக்க புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

தமிழகத்தில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக வியாழக்கிழமை முதல் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும் இன்று ஞாயிற்றுகிழமை முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகின்றன. ஊரடங்கு நாளில் சென்னை புறநகர் ரெயில்கள் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில் சென்னை புறநகர் ரெயில்களில் பயணிக்க,  2 டோஸ் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்று தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.  UTS செயலி மூலம் முன்பதிவு செய்யும் வசதி நாளை முதல் தற்காலிக நிறுத்தம் என்றும், பயணிகள் கொரோனா தடுப்பூசி சான்றிதழ், அடையாள அட்டைகளை காட்டினால் மட்டுமே பயணிச்சீட்டு வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

முககவசம் அணியாத ரெயில் பயணிகளுக்கு ரூ.500 அபராதம் விதிக்கப்படும் என்றும் தெற்கு ரெயில்வே அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. இந்த புதிய  கட்டுப்பாடுகள் நாளை முதல் அமலுக்கு வருகின்றன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து