முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இன்று ஊரடங்கு அமல்: மீனவர்கள் கடலுக்கு செல்லாததால் 4 கோடி ரூபாய் வர்த்தகம் பாதிப்பு

சனிக்கிழமை, 8 ஜனவரி 2022      தமிழகம்
Image Unavailable

ஊரடங்கால் மீன்பிடி தொழிலில் நேரடியாகவும், மறைமுகமாகவும் ஈடுபட்டுள்ள சுமார் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

தமிழகத்தில் கொரோனா மற்றும் ஒமைக்ரான் பரவலை கட்டுப்படுத்த இரவு நேரங்களிலும், ஞாயிற்றுக்கிழமைகளிலும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் இன்று முழு ஊரடங்கை முன்னிட்டு ராமேஸ்வரத்தில் மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லாததால், படகுகள் துறைமுகத்தில் நங்கூரமிட்டு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. 

இதனால் மீன்பிடி தொழிலில் நேரடியாகவும், மறைமுகமாகவும் ஈடுபட்டுள்ள சுமார் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக சுமார் 4 கோடி ரூபாய்க்கும் மேல் வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே இது போன்ற வேலை நிறுத்தக் காலங்களில் அரசு மீன்பிடி தொழிலாளர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என மீனவர்கள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து