முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழகத்தில் மருத்துவ படிப்புக்கான கவுன்சிலிங் 2 வாரங்களில் துவக்கம்

சனிக்கிழமை, 8 ஜனவரி 2022      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை : மருத்துவ பட்டப்படிப்பு, மேற்படிப்புகளில் அகில இந்திய ஒதுக்கீட்டில் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு 27 சதவீதம் இடஒதுக்கீட்டை சுப்ரீம் கோர்ட்டு உறுதி செய்ததை அடுத்து, தமிழகத்தில் மருத்துவ படிப்புக்கான கவுன்சிலிங் 2 வாரங்களில் துவங்கும் என தெரிகிறது.

தமிழகத்தில் 11 புதிய மருத்துவக் கல்லூரிகளை சேர்த்து 37 அரசு மருத்துவக்கல்லூரிகள் மற்றும் 2 அரசு பல் மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. இதில் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கான 15 சதவீதம் இடங்கள் போக 4,277 எம்.பி.பி.எஸ். இடங்களும், 175 பி.டி.எஸ். இடங்களும் உள்ளன. தனியார் மருத்துவக் கல்லூரிகளின் அரசு மற்றும் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வையும் மருத்துவக் கல்வி இயக்ககம் நடத்துகிறது.

இதன்படி 2021-2022-ம் கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கைக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு டிசம்பர் 19-ந்தேதி தொடங்கியது. நீட் தேர்வில் தகுதி பெற்ற மாணவர்கள் இதற்கு விண்ணப்பித்தனர். நேற்று முன்தினம் மாலையுடன் விண்ணப்பம் பதிவு செய்வதற்கு அவகாசம் முடிந்தது. 40 ஆயிரத்து 288 பேர் மருத்துவப் படிப்புகளுக்கு விண்ணப்பித்துள்ளனர். விண்ணப்ப படிவங்களை பதிவிறக்கம் செய்து தகுந்த ஆவணங்களுடன் நேரிலோ, தபால் வாயிலாகவோ, செயலர், மருத்துவக் கல்வி இயக்ககம், 162, ஈ.வே.ரா. நெடுஞ்சாலை, கீழ்ப்பாக்கம், 10 என்ற முகவரியில் 10-ந்தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு 2 வாரத்துக்குள் தரவரிசை பட்டியல் வெளியிடப்படும் என்று மருத்துவ மாணவர் சேர்க்கை செயலாளர் வசந்தாமணி தெரிவித்தார். அகில இந்திய இடஒதுக்கீட்டுக்கான முதற்கட்ட கலந்தாய்வு கவுன்சிலிங் முடிந்ததும் மாநில அளவிலான கவுன்சிலிங் தொடங்கும் என்றும் அவர் தெரிவித்தார். உத்தேசமாக இன்னும் 2 வாரத்தில் மருத்துவ கலந்தாய்வு தொடங்குவதற்கு வாய்ப்பு உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து