முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சுற்றுலா பயணிகளுக்கு கட்டுப்பாடு: 2 தவணை தடுப்பூசி செலுத்தியிருந்தால் மட்டுமே கொடைக்கானலில் அனுமதி

சனிக்கிழமை, 8 ஜனவரி 2022      தமிழகம்
Image Unavailable

Source: provided

கொடைக்கானல் : கொடைக்கானலில் உள்ள சுற்றுலாத் தலங்களுக்கு செல்ல சுற்றுலா பயணிகள் 2 தவணை தடுப்பூசி செலுத்தி யிருக்க வேண்டும் எனக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

கொடைக்கானலுக்கு வார இறுதி நாட்களில் சுற்றுலாபயணிகள் வருகை அதிகரித்து காணப்படுகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் முதல் கொடைக்கானலில் உள்ள சுற்றுலாத்தலங்களுக்குச் செல்ல அவசியம் 2 தவணை கரோனா தடுப்பூசி செலுத்தி இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கொடைக்கானல் பிரையண்ட் பூங்கா, செட்டியார் பூங்கா, ரோஜா தோட்டம் மற்றும் ஏரியில் படகுசவாரி செய்ய 2 தவணை தடுப்பூசி செலுத்தி இருப்பது அவசியம். 2 தவணை தடுப்பூசி செலுத்தி உள்ளனரா என சான்றிதழ்களை சரி பார்த்த பிறகே சுற்றுலா பயணி கள் அனுமதிக்கப்படுகின்றனர். இந்த நடை முறை நேற்றுமுதல் கடைப்பிடிக்கப் படுகிறது. வனத்துறைக்கு சொந்தமான சுற்றுலா தலங்களில் இந்தக் கட்டுப்பாடு கள் உள்ளதா எனத் தெரிவிக்கப்படவில்லை.

கொடைக்கானலில் வழக்கமாக வாரச்சந்தை ஞாயிற்றுக்கிழமைகளில் செயல்படும். அரசு ஞாயிற்றுக்கிழமை ஊரடங்கு அறிவித்துள்ளதால் நேற்று வாரச்சந்தை நடக்கும் என கொடைக்கானல் நகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது. கொரோனா விதிமுறைகளை கடைப் பிடித்து 50 சதவீத கடைகளோடு சந்தை இயங்க உள்ளதாகவும், சந்தைக்கு வரும் பொதுமக்கள் சமூக இடைவெளியை கடைப்பிடிப்பதுடன் முகக்கவசம் கட் டாயம் அணிந்து வரவேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. விதிமுறை களை கடைப்பிடிக்காவிட்டால் அபராதம் விதிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து