முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சென்னையில் நோய்த் தடுப்பு நடவடிக்கைகளில் அரசு தீவிரம் காட்ட வேண்டும்: டி.டி.வி. தினகரன் வலியுறுத்தல்

ஞாயிற்றுக்கிழமை, 9 ஜனவரி 2022      அரசியல்
Image Unavailable

சென்னையில் நோய்த் தடுப்பு நடவடிக்கைகளில் தமிழக அரசு தீவிரம் காட்ட வேண்டும் என்று தினகரன் வலியுறுத்தியுள்ளார்.

தமிழகத்தில் நேற்றுமுன்தினம் 10,978 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதில் சென்னையில் மட்டும் 5,098 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் சென்னையில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் தீவிரம் காட்ட வேண்டும் என்று அரசியல் கட்சித் தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

இதுகுறித்து அ.ம.மு.க. பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-தமிழ்நாட்டில் ஒட்டுமொத்தமாக கொரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் பாதிப்பு அதிகமானோர் சென்னையைச் சேர்ந்தவர்களாக இருப்பதால், தலைநகரில் நோய்த் தடுப்பு நடவடிக்கைகளில் தமிழக அரசு இன்னும் தீவிரம் காட்ட வேண்டும்.

அடுத்து பொங்கல் பண்டிகை வருவதால் சென்னையில் இருந்து வெளியூர் செல்பவர்களின் மூலமாக நோய்ப் பரவல் தமிழகம் முழுவதும் மேலும் அதிகரிக்கும் வாய்ப்பு இருக்கிறது. எனவே, அரசு இதனை மிகவும் கவனமாகக் கையாள வேண்டும்.சென்னையில் கொரோனா பரவலைக் கட்டுக்குள் வைப்பதற்கு வார்டு வாரியாக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். நிலைமை கை மீறிப் போவதற்குள் தமிழக அரசு உடனடியாக செயல்பட வேண்டியது அவசியம் என்று பதிவிட்டுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!