முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சென்னை பட்டினப்பாக்கத்தில் பூஸ்டர் தடுப்பூசி செலுத்தும் பணியை முதல்வர் இன்று துவக்கி வைக்கிறார்

ஞாயிற்றுக்கிழமை, 9 ஜனவரி 2022      தமிழகம்
Image Unavailable

இந்தியா முழுவதும் இன்று பூஸ்டர் தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கும் நிலையில், தமிழகத்தில் மு.க. ஸ்டாலின் பட்டினப்பாக்கத்தில் தொடங்கி வைக்கிறார். தமிழகம் முழுவதும் 4 லட்சம் பேர் பூஸ்டர் தடுப்பூசி எடுத்துக்கொள்ள இருக்கிறார்கள்.

கொரோனா பாதிப்பில் இருந்து விடுபட தடுப்பூசி போடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. தமிழகத்தில் இதுவரை 8 கோடியே 83 லட்சத்து 2,071  தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது. இதற்காக சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டு தடுப்பூசி போடப்படுகிறது. இதில் மாநில அளவில் முதல் தவணை தடுப்பூசி செலுத்தியவர்களின் எண்ணிக்கை 87.35 சதவீதம் ஆகும். 2-ம் தவணை தடுப்பூசி செலுத்தியவர்களின் எண்ணிக்கை 61.46 சதவீதமாகும்.

சென்னையை பொறுத்த வரை 92 சதவீதம் பேருக்கு முதல் தவணை தடுப்பூசியும், 2-ம் தவணை தடுப்பூசி 71 சதவீதம் பேருக்கும் செலுத்தப்பட்டுள்ளது. இந்த சூழலில் கொரோனா உருமாறி ‘ஒமைக்ரான்’ வைரசாக வேகமாக பரவி வருவதால் அரசு பல்வேறு முன் எச்சரிக்கை நடவடிக்கைளை எடுத்து வருகிறது.

இதன் ஒரு கட்டமாக பூஸ்டர் தடுப்பூசி போடும் பணியும் இன்று தொடங்குகிறது. சென்னை பட்டினப்பாக்கம் எம்.ஆர்.சி. நகரில் உள்ள ‘இமேஜ்’ஆடிட் டோரியத்தில் நடைபெறும் இந்த முகாமை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். முன்களப் பணியாளர்கள், 2 தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் பூஸ்டர் தடுப்பூசி போட தகுதியானவர்கள்.

இதுகுறித்து சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது., தமிழகத்தில் இன்று முதல் பூஸ்டர் தடுப்பூசி போடும் பணி தொடங்குகிறது. முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இதை தொடங்கி வைக்கிறார். முதல் தவணை மற்றும் 2-ம் தவணை எந்தவகை தடுப்பூசி செலுத்தப்பட்டதோ, அந்த தடுப்பூசியே பூஸ்டர் டோஸ் ஆக போடப்படும். 

தமிழகத்தில் 35.46 லட்சம் பேர் தடுப்பூசி போடுவதற்கு தகுதியானவர்களாக உள்ளனர். இதில் 9.78 லட்சம் பேர் முன்கள பணியாளர்கள். 5.65 லட்சம் பேர் சுகாதாரப் பணியாளர்கள். 20.03 லட்சம் பேர் இணை நோயாளிகள் மற்றும் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள். இவர்களில் தடுப்பூசி போட்டு 9 மாதங்கள் கடந்தவர்கள், 2021 ஏப்ரல் 14-க்கு முன்வரை தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போட்டுக்கொள்ள தகுதியானவர்கள். அந்த வகையில் 4 லட்சம் பேர் இன்று பூஸ்டர் தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம். இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 4 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து