முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மக்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும்: தமிழகத்தில் ஊரடங்கின் பலன் மெதுவாகத்தான் தெரியவரும்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம்

ஞாயிற்றுக்கிழமை, 9 ஜனவரி 2022      தமிழகம்
Image Unavailable

மக்கள் அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்த தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், தமிழத்தில் அமல்படுத்தப்படும் ஊரடங்கின் பலன்மெதுவாகதான் தெரியவரும் என்று தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் கொரோனா மற்றும் ஒமைக்ரான் பரவல் தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளாது. இதனால் பல மாநிலங்கள் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. இந்த நிலையில், தமிழ்நாட்டில் தொற்று பரவல் காரணமாக இன்று வரை இரவு ஊரடங்கு மற்றும் நேற்று முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டிருந்தது. அதன்படி, நேற்று முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது. இந்த ஊரடங்கு குறித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறுகையில், 

தற்போது தமிழ்நாட்டில் பின்பற்றப்பட்டு வரும் ஞாயிறு முழு ஊரடங்கின் மூலம் தொற்றை படிப்படியாக குறைக்க முடியும். இதன் பலன் மெதுவாகத்தான் தெரியவரும். மக்கள் முக கவசம் மற்றும் சமூக இடைவேளியை பின்பற்ற வேண்டியது அவசியமாகும். ஒமைக்ரானும் பரவி வருவதால், மக்கள் கூடுதல் கட்டுப்பாட்டுடன் இருக்க வேண்டும். 

தற்போது போடப்பட்டுள்ள ஞாயிறு முழு ஊரடங்கு தற்போதைய சூழலின் அவசியமாக உள்ளது. பிப்ரவரி வரை தொற்று அதிகம் இருக்கும் என்ற கணிப்பு உள்ளது. கொரோனாவை கட்டுப்படுத்த அரசு அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது. மக்கள் அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். முழு ஊரடங்கு விதிக்கக்கூடாது என்பதே நிபுணர்களின் கருத்தாகும். இவ்வாறு அமைச்சர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து