முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளுக்கான தமிழக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தேதி ஜனவரி 17ல் அறிவிக்க வாய்ப்பு

ஞாயிற்றுக்கிழமை, 9 ஜனவரி 2022      தமிழகம்
Image Unavailable

தமிழகத்தில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தேதி வரும் ஜனவரி 17ல் அறிவிக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. சுப்ரீம் கோர்ட் ஏற்கனவே கெடு விதித்துள்ளதால் மாநில தேர்தல் ஆணையம் தேர்தல் நடத்துவதற்கான முன்னேற்பாடுகளை தீவிரமாக செய்து வருகிறது.

தமிழ்நாட்டில் ஊரக உள்ளாட்சிகளுக்கான தேர்தல் நடைபெற்று முடிந்துள்ள நிலையில் நகர்ப்புற உள்ளாட்சிகளான மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகளுக்கான தேர்தல் எப்போது நடைபெறும் என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை ஜனவரி 31-ம் தேதிக்குள் நடத்த வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு ஏற்கனவே கெடு விதித்துள்ளதால் மாநில தேர்தல் ஆணையம் தேர்தல் நடத்துவதற்கான முன்னேற்பாடுகளை தீவிரமாக செய்து வருகிறது.

இதற்காக வாக்காளர் பட்டியல் தயாரிப்பது, வாக்குச்சாவடி மையங்களுக்கு சி.சி.டி.வி. கேமரா பொருத்துவது மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மாநில தேர்தல் ஆணையம் ஏற்கனவே ஆலோசனை நடத்தி உள்ளது. அதுமட்டுமின்றி புதிதாக தரம் உயர்த்தப்பட்ட மாநகராட்சிக்ள், நகராட்சிகள், பேரூராட்சிகளுக்கும் சேர்த்து வார்டுகள் பிரிக்கும் பணியும் வேகமாக நடை பெற்று வந்தது.

இதில் எந்தெந்த வார்டு ஆண்கள் வார்டு, பெண்கள் வார்டு என்று பிரித்து முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த பட்டியலை இறுதி செய்யும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. இந்த பணி இன்னும் 2 நாளில் முடிந்து விடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் நகர்ப்புற உள்ளாட்சிக்கான தேர்தல் தேதி வருகிற 17-ம் தேதி அறிவிக்கப்படக்கூடும் என தகவல்கள் வெளியாகி வருகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 4 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து