முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முழு ஊரடங்கால் தமிழகத்தில் ஒரே நாளில் ரூ.218 கோடிக்கு மதுபானம் விற்பனை

ஞாயிற்றுக்கிழமை, 9 ஜனவரி 2022      தமிழகம்
Image Unavailable

தமிழகத்தில் நேற்று அமல்படுத்தப்பட்டிருந்த முழு ஊரடங்கால் ஒரே நாளில் (சனிக்கிழமை) ரூ.218 கோடிக்கு மது விற்பனையானதாக டாஸ்மாக் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் நேற்று முன்தினம் இரவு 10 மணி முதல் இன்று காலை 5 மணி வரை முழு ஊரடங்கு அமலில் இருந்தது. இதனை அடுத்து நேற்று மதுகடைகள் அனைத்தும் மூடப்பட்டன. இதனால் நேற்று முன்தினம் சனிக்கிழமை, மதுபானக்கடைகளில் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. 

நீண்ட வரிசையில் நின்ற மதுப்பிரியர்கள் மதுபானங்களை வாங்கி சென்றனர். திருப்பத்தூர் மாவட்டம் பைபாஸ் சாலையில் ஒரே இடத்தில் அமைந்துள்ள மூன்று டாஸ்மாக் கடைகளில் ஏராளமானோர் திரண்டனர். தங்களுக்கு பிடித்த மதுபானங்களை அவர்கள் வாங்கி சென்றனர். அவர்களது இருசக்கர வாகனங்கள் சாலையில் நிறுத்தப்பட்டிருந்ததால், சிறிது நேரம் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 

புதுக்கோட்டையில் புதிய பேருந்து நிலையம், டிவிஎஸ் கார்னர் பகுதிகளில் உள்ள மதுபான கடைகளில் கூட்டம் அலைமோதியது.  முக கவசம் அணியாமலும், சமூக இடைவெளியை கடைப்பிடிக்காமலும் மதுப்பிரியர்கள் மதுபானங்களை வாங்கி சென்றனர். இந்நிலையில் தமிழகத்தில் நேற்று முன்தினம் ஒரே நாளில் ரூ.217.96  கோடிக்கு மது விற்பனை நடைபெற்றுள்ளதாக டாஸ்மாக் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து