முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழகத்தில் முழு ஊரடங்கின் போது வெறிச்சோடிய 'சுற்றுலா தளங்கள்'

ஞாயிற்றுக்கிழமை, 9 ஜனவரி 2022      தமிழகம்
Image Unavailable

தமிழகத்தில் நேற்று அமல்படுத்தப்பட்ட முழு ஊரடங்கால் நேற்று 'சுற்றுலா தளங்கள்' அனைத்தும் ஆள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டன.

தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்க இரவு ஊரடங்கு, ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு உள்ளது. ஊரடங்கு காரணமாக மக்கள் அவசியம் இன்றி வெளியே வரக்கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது.  இதனால், சுற்றுலா தளங்களும் ஆள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடின. 

முழு ஊரடங்கு காரணமாக  ஊட்டி நகரம் முழுவதும் வெறுமையாக காணப்பட்டது.  எப்போதும் பரபரப்பாக காணப்படும் கமர்சியல் சாலை, தாவரவியல் பூங்கா சாலை, சேரிங்கிராஸ் வாகன போக்குவரத்து இன்றி வெறிச்சோடி காணப்பட்டது. நீலகிரி மாவட்டம் முழுவதும் 450 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். ஊட்டி சேரிங்கிராஸ் உள்ளிட்ட முக்கிய சந்திப்புகளில் போலீசார் தடுப்புகள் வைத்து கண்காணித்தனர். அவசியமின்றி வெளியே இருசக்கர வாகனங்கள் மற்றும் கார்களில் வந்தவர்களை சோதனை செய்தனர்.  அதேபோல், தமிழகத்தின் இதர சுற்றுலா தளங்களான கொடைக்கானல், கன்னியாகுமரி, குற்றாலம் உள்ளிட்ட பகுதிகளும் ஆள்நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து