முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நேபாளத்தில் ஜனவரி இறுதி வரை பள்ளிகளை மூட முடிவு

திங்கட்கிழமை, 10 ஜனவரி 2022      உலகம்
Image Unavailable

நேபாளத்தில் ஜனவரி மாத இறுதி வரை பள்ளிகளை மூட முடிவு செய்யப்பட்டு உள்ளது என கல்வி அமைச்சகம் தெரிவித்து உள்ளது.

உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா பாதிப்புக்கு இந்தியாவின் அண்டை நாடான நேபாளமும் சிக்கி தவித்து வருகிறது.  இதனை முன்னிட்டு பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், அரசு அலுவலகங்கள், ஓட்டல்கள், திரையரங்குகள், ஸ்டேடியங்கள் போன்ற பொது இடங்களுக்கு செல்வதற்கும் மற்றும் உள்ளூர் விமானங்களில் ஏறுவதற்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தியதற்கான அட்டையை கட்டாயம் வைத்திருக்க வேண்டும் என்ற முடிவை அரசு எடுத்துள்ளது. இந்த முடிவானது வரும் 17-ம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் என அந்நாட்டு கொரோனா பேரிடர் மேலாண் மையம் தெரிவித்து இருந்தது.  இந்த நிலையில், கொரோனாவின் தீவிர பாதிப்புகளை கவனத்தில் கொண்டு, நேபாளத்தில் ஜனவரி மாத இறுதி வரை பள்ளிகளை மூட முடிவு செய்யப்பட்டு உள்ளது என கல்வி அமைச்சகம் தெரிவித்து உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

சர்க்கரை நோயினால் ஏற்படும் எரிச்சல், பாத எரிச்சல் - கை கால் எரிச்சல் குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் கட்டிகள் கரைய, குணமாக, அடிபட்ட வீக்கம், காயங்களுக்கு, நரம்பு சிலந்தி, சிலந்தி புண், வீக்கம் ஆற சித்த மருத்துவ குறிப்புக்கள் மஞ்சள் காமாலை குணமாக | கல்லிரல் குறைபாடு நீங்க | இரத்தம் தூய்மையாக | பாண்டு தீர - சித்த மருத்துவ குறிப்புக்கள்
பித்த நோய்கள் குணமாக | பித்த மயக்கம் தீர | பித்த நீர் மலத்துடன் வெளியேற | உடல் உஷ்ணத்தை தணிக்க | கல்லடைப்பு முகப்பரு குணமாக | தழும்புகள், கரும்புள்ளி, பாலுண்ணி நீங்க | மருவு கரப்பான் பிளவை தீர சித்த மருத்துவ குறிப்புக்கள் மூட்டு வலி குணமாக | Natural Home Remedy for Knee & Hip Joint Pain | Arthritis
View all comments

வாசகர் கருத்து