முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிரபல நடிகைகள் ஷோபனா, குஷ்புவுக்கு கொரோனா

திங்கட்கிழமை, 10 ஜனவரி 2022      சினிமா
Image Unavailable

பிரபல திரைப்பட நடிகைகள் ஷோபனா, குஷ்புவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

இந்தியாவில் கொரோனா அலை மீண்டும் வேகம் எடுத்துள்ளது. இதனால் திரையுலகினரும் அதிகளவில் பாதிக்கப்பட்டு வருகின்றனர். தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என பல மொழிகளில் உள்ள கலைஞர்களும் இந்நோய் தொற்றுக்கு ஆளாகி வருகின்றனர்.

கமல், வடிவேலு, இயக்குனர் சுராஜ் உள்ளிட்டோர் இந்நோய் தொற்று ஆளாகி குணமாகினர். தற்போது சத்யராஜ், திரிஷா, ஷெரின், விஷ்ணு விஷால், தெலுங்கில் மகேஷ்பாபு, தமன், லட்சுமி மஞ்சு, இந்தியில் அர்ஜூன் கபூர் குடும்பம், கரீனா கபூர், ஸ்வரா பாஸ்கர் என திரையுலகினர் பலரும் கொரோனா பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர். 

இந்நிலையில் நேற்று நடிகைகள் ஷோபனா, குஷ்பு ஆகியோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களில் ஷோபனா ஒமைக்ரான் வகை வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளார்.  தளபதி, இது நம்ம ஆளு உள்ளிட்ட தமிழில் ஏராளமான படங்களிலும், தென்னிந்திய மொழிகளிலும் நடித்துள்ள ஷோபனா நடிப்போடு நடனத்தில் அதிக ஈடுபாடு கொண்டவராக உள்ளார். நடன பள்ளியும் நடத்தி வருகிறார்.

ஒமைக்ரான் நோய் தொற்றுக்கு ஆளானது பற்றி ஷோபனா தனது வலைதளத்தில், அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்தபோதிலும்  எனக்கு ஒமைக்ரான் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. உடல்வலி, குளிர் நடுக்கம் போன்றவை எனக்கு அறிகுறிகளாக இருந்தன. 2 டோஸ் தடுப்பூசி செலுத்தியதால் இந்த வகை வைரஸில் இருந்து 85 பாதுகாப்பு அளிப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும். இந்த வைரஸ் தொற்று இந்த ஒமைக்ரான் உடன் முடிவுக்கு வர வேண்டும் ஆண்டவனை வேண்டுகிறேன் என்று தெரிவித்துள்ளார். 

நடிகை குஷ்பு கூறுகையில், இரண்டு அலைகளை கடந்து வந்த பின் இறுதியாக கோவிட் என்னை தொற்றிக் கொண்டது. நேற்று  பரிசோதனையில் பாசிட்டிவ் என வந்தது. வீட்டிலேயே என்னை தனிமைப்படுத்தி சிகிச்சை பெற்று வருகிறேன். தனியாக இருப்பதை வெறுக்கிறேன். எனவே அடுத்த 5 நாட்களுக்கு என்னை மகிழ்ச்சியாக வைக்கவும். ஏதேனும் அறிகுறிகள் இருந்தால் பரிசோதனை செய்து கொள்ளுங்கள் என்று கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து