முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கொரோனா பரவல் வழிகாட்டு நெறிமுறைகளை மாநில அரசு ஊழியர்களுக்கும் நடைமுறைப்படுத்த வேண்டும்: ஓ.பி.எஸ். வலியுறுத்தல்

திங்கட்கிழமை, 10 ஜனவரி 2022      அரசியல்
Image Unavailable

கொரோனா மூன்றாவது அலை வேகமாகப் பரவுவதையடுத்து மத்திய அரசு ஊழியர்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை மாநில அரசு ஊழியர்களுக்கும் நடைமுறைப்படுத்த வேண்டும் என்று அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

இந்தியா முழுவதும் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,59,632 என்ற அளவிலும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 327 என்ற அளவிலும் இருக்கின்ற நிலையினை கருத்தில் கொன்டு மத்திய அரசு ஊழியர்களுக்கு சில விலக்குகளையும், வழிகாட்டு நெறி முறைகளையும் மத்திய அரசு அறிவித்துள்ள நிலையில் அதனை மாநில அரசு ஊழியர்களுக்கும் நடைமுறைபடுத்த வேண்டிய சூழ்நிலை தற்போது உருவாகி உள்ளது.

கொரோனா 3-வது அலை வேகமாக பரவிக் கொண்டிருக்கின்ற சூழ்நிலையில் மத்திய அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு ஊழியர்களுக்கும் விரிவுபடுத்தினால் மாற்றுத்திறனாளிகள் மற்றும் கர்ப்பிணி பெண்களின் நலம் பாதுகாக்கப்படுவதோடு அரசு ஊழியர்களை கொரோனா தொற்று பாதிப்பது கணிசமாக தடுக்கப்படும். மத்திய அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு பின்பற்ற வேண்டும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. எனவே முதல்வர், அரசு அதிகாரிகளுடன் கலந்து ஆலோசித்து மத்திய அரசு வகுத்துள்ள வழிகாட்டு நெறிமுறைகளை மாநில அரசு ஊழியர்களுக்கும் நீட்டிக்க வழிவகை செய்ய வேண்டும். இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!