முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

களவாணி திருமுருகன் நடிக்கும் ஓணான்

திங்கட்கிழமை, 10 ஜனவரி 2022      சினிமா
Image Unavailable

Source: provided

சற்குணம் இயக்கத்தில் விமல், ஓவியா, நடிப்பில் கடந்த 2010 ஆம் ஆண்டு வெளியான படம் களவாணி. நடிகர்களின் எதார்த்தமான நடிப்பால் இப்படம் மாபெரும் வெற்றிப் படமாக மாறியது. இப்படத்தின் ஹீரோவாக நடித்த விமல் மற்றும் வில்லனாக நடித்த திருமுருகன் ஆகிய இருவரும் இப்படம் மூலம் பிரபலமாகினர். திருமுருகன் களவாணி திரைப்படத்தைத் தொடர்ந்து ஈட்டி, பென்சில் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்து வந்தார். இந்நிலையில், ஓணான் என்ற திரைப்படம் மூலம் தற்போது ஹீரோவாக  உருவெடுத்துள்ளார்.  எலிஃபெண்ட் ஃப்ளை எண்டர்டெயின்மெண்ட் சார்பில் P.R ரஞ்சித்குமார். தயாரிப்பில் சென்னன் இயக்கியுள்ள இப்படத்தில் தான் திருமுருகன் ஹீரோவாக நடித்துள்ளார். இந்த படத்தில் திருமுருகனுக்கு ஜோடியாக ஷில்பா மஞ்சுநாத் நடிக்கிறார்.  இவர்களுடன் காளி வெங்கட், சிங்கம் புலி, சரவண சக்தி, பூ ராம் உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்துள்ளனர். படத்துக்கு இசை ஆண்டனி ஆப்ரகாம், படத்தின் ஆரம்பம் முதலே கொலைகார சைக்கோவாக வரும் நாயகன் திருமுருகன்,  கிளைமாக்ஸ் காட்சியில் தான் யார் என்பதைச் வெளிப்படுத்தி அனைவரின் மனங்களில் இடம் பிடிக்கிறார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து