முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

16-ம் தேதி முழு ஊரடங்கு என்பதால் பொங்கல் சிறப்பு பஸ்கள் இயக்கத்தில் மாற்றம்

செவ்வாய்க்கிழமை, 11 ஜனவரி 2022      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை : தமிழக அரசு வரும் 16-ம் தேதி  அன்று முழு ஊரடங்கினை அறிவித்துள்ளதால் மேற்படி கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளில் மாறுதல் செய்து பொங்கலுக்கு பின்பு 16.01.2022 முதல் 18.01.2022 வரை இயக்குவதாக இருந்த சிறப்புப் பேருந்துகள் இயக்கம் 17.01.2022 முதல் 19.01.2022 வரை இயக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது. 

இது குறித்து போக்குவரத்து துறை முதன்மை செயலர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது,

தமிழக முதல்வரின் உத்தரவின் பேரில், 2022-ம் ஆண்டு பொங்கல் திருநாளை முன்னிட்டு, போக்குவரத்துத் துறையின் சார்பில் மேற்கொள்ளப்படும் சிறப்பு  ஏற்பாடுகள் மற்றும் சிறப்பு பேருந்துகள் இயக்கம் குறித்து கடந்த 20.12.2021 அன்று  அமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன் தலைமையில் பல்வேறு துறை அலுவலர்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அவற்றின்படி பொங்கல் இயக்கம் சிறப்பாக நடைபெற அனைத்து எற்பாடுகளும் செய்யப்பட்டு வருகிறது.

இந்நிலையில், தற்பொழுது தமிழக அரசு வரும் 16-ம் தேதி  அன்று முழு ஊரடங்கினை அறிவித்துள்ளதால் மேற்படி கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளில் மாறுதல் செய்து பொங்கலுக்கு பின்பு 16.01.2022 முதல் 18.01.2022 வரை இயக்குவதாக இருந்த சிறப்புப் பேருந்துகள் இயக்கம் 17.01.2022 முதல் 19.01.2022 வரை இயக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும், 16.01.2022 அன்று முன்பதிவு செய்துள்ள பயணிகளுக்கு முழு தொகையும் திரும்ப இரண்டு தினங்களில் கிடைப்பதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது.  எனவே, பயணிகள் வரும் 16-ம் தேதி அன்று பயணம் மேற்கொள்வதை தவிர்த்து மற்ற நாட்களில் முன்பதிவு செய்து பயணம் மேற்கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறது.  

பொங்கலுக்கு பின்பு அதாவது வரும் 17-ம் தேதி தினசரி இயக்கப்படும் நிர்ணய பேருந்துகள் 2,100, பல்வேறு இடங்களில் இருந்து சென்னைக்கு 2030 சிறப்பு பேருந்துகளும், சென்னையை தவிர்த்து இதர இடங்களுக்கு 3,625 பேருந்துகளும் இயக்கப்படுகின்றன. வரும் 18-ம் தேதி தினசரி இயக்கப்படும் நிர்ணய பேருந்துகள் 2,100, பல்வேறு இடங்களில் இருந்து சென்னைக்கு 1358 பேருந்துகளும், சென்னையை தவிர்த்து இதர இடங்களுக்கு 1856 பேருந்துகளும் இயக்கப்படுகின்றன. வரும் 19-ம் தேதி தினசரி இயக்கப்படும் நிர்ணய பேருந்துகள் 2,100, பல்வேறு இடங்களில் இருந்து சென்னைக்கு 409 பேருந்துகளும், சென்னையை தவிர்த்து இதர இடங்களுக்கு 1131 பேருந்துகளும் என ஆக மொத்தம் 16,709 பேருந்துகள் இயக்கப்படுகின்றன.  

மேலும், பொங்கல் முடிந்து வரும் 15-ம் தேதி அன்று தொலை தூரங்களில் இருந்து சென்னை வரும்  பேருந்துகள் அனைத்தும், பயணிகள் புறநகர் ரயில் மூலமாக தங்களுடைய இருப்பிடம் செல்வதற்கு ஏதுவாக தாம்பரம், குரோம்பேட்டை மற்றும் பல்லாவரம் வழியாக இயக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து