முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

2 ஆண்டுகளுக்கு பின் உகாண்டாவில் பள்ளிக்கூடங்கள் மீண்டும் திறப்பு

செவ்வாய்க்கிழமை, 11 ஜனவரி 2022      உலகம்
Image Unavailable

சுமார் 2 ஆண்டுகளுக்கு பிறகு உகாண்டாவில் பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன.

கிழக்கு ஆப்பிரிக்க நாடான உகாண்டாவில் கொரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த 2020-ம் ஆண்டு மார்ச் மாதம் பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டன. அதை தொடர்ந்து அங்கு பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தும் பணிகள் தொடங்கின. ஆனால் நாட்டில் உள்ள பெரும்பாலான அரசு பள்ளிக்கூடங்களில் ஆன்லைன் வகுப்புகள் நடத்துவதற்கான வசதிகள் இல்லாததால் மாணவர்களின் கல்வி வெகுவாக பாதிக்கப்பட்டது. இதனால் பெரும்பாலான மாணவர்கள் சுரங்களில் வேலைக்கு சென்றனர்.

இந்த விவகாரத்தில் அதிபர் யோவேரி முசெவேனி கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்ட போதும் பள்ளிகளை திறக்க அவர் உத்தரவிடவில்லை. இந்த நிலையில் சுமார் 2 ஆண்டுகளுக்கு பிறகு உகாண்டாவில் நேற்று முன்தினம் பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டன. மாணவர்கள் அனைவரும் ஆர்வத்துடன் பள்ளிகளுக்கு படையெடுத்தனர். இதன் காரணமாக தலைநகர் கம்பாலா உள்ளிட்ட பல நகரங்களில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து