முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பொங்கலுக்கு ஊர் சென்றவர்கள் திரும்ப ஏதுவாக வரும் 17-ம் தேதி அரசு விடுமுறை அறிவிப்பு

செவ்வாய்க்கிழமை, 11 ஜனவரி 2022      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை : தமிழகத்தில் வரும் 17-ம் தேதி அனைத்து அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை விடப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

தமிழகத்தில் வரும் 17-ம் தேதி அனைத்து அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை விடப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. 18-ம் தேதி தைப்பூசத்திற்கு அரசு விடுமுறை என்பதால், 17-ம் தேதியும் விடுமுறை அளித்து தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 17-ம் தேதி விடுமுறையை  ஈடு செய்யும் வகையில் ஜனவரி 29-ம் தேதி பணி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

அரசின் இந்த அறிவிப்பால், வரும் 14-ம் தேதி முதல் செவ்வாய்க்கிழமை வரை  தொடர்ந்து 5 நாட்கள் விடுமுறை கிடைத்துள்ளது. பொங்கல் பண்டிகையை கொண்டாட சொந்த ஊர் செல்பவர்களுக்கு  அரசின் இந்த அறிவிப்பு கூடுதல் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  

ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு என்பதால், அன்றைய தினம் சொந்த ஊர்களில் இருந்து திரும்ப முடியாத நிலை இருந்தது. தற்போது திங்கள் கிழமை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால், பொங்கள் கொண்டாட சென்றவர்கள் சிரமமின்றி பயணம் மேற்கொள்ள முடியும். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து