முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இலங்கை- சீன உறவில் தலையிடக்கூடாது: இந்தியாவுக்‍கு சீனா மறைமுக எச்சரிக்‍கை

செவ்வாய்க்கிழமை, 11 ஜனவரி 2022      உலகம்
Image Unavailable

இலங்கை - சீன உறவில் எந்த மூன்றாவது நாடும் தலையிடக்கூடாது என இந்தியாவுக்‍கு சீனா மறைமுக எச்சரிக்‍கை விடுத்துள்ளது. 

இலங்கையில் 2 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்ட சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீ, அந்நாட்டு பிரதமர் மகிந்த ராஜபக்சேவை சந்தித்து பேசினார். இலங்கை - சீனா நாடுகள் இடையேயான நட்பு 2 நாடுகளின் வளர்ச்சிக்கும் உதவுவதாக தெரிவித்தார். இலங்கை - சீன உறவு, வேறு மூன்றாம் நாடுகளை குறிவைக்கவில்லை என்றும் இரு நாட்டு உறவில் மூன்றாம் நாடு தலையிடக்கூடாது என்றும் கூறினார்.

சீனாவின் சமன் சென்ற இலங்கை அம்பன்தோட்ட துறைமுக குத்தகை, கொழும்பு துறைமுக நகர திட்டம் போன்றவை இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்களாக பார்க்கப்படும் நிலையில், சீன வெளியுறவு அமைச்சரின் கருத்து முக்‍கியத்துவம் பெற்றுள்ளது. 

அதுமட்டுமல்லாமல் இந்தியாவின் எல்லை மாநிலங்களான அருணாச்சல பிரதேசம் உள்ளிட்ட பகுதிகளில் சீனா ஆக்கிரமிப்பு செய்து ஊர்களின் பெயர்களை மாற்றியது சாட்டிலைட் புகைப்படங்களில் தெரிய வந்துள்ளது. முன்னதாக சீனா எங்களது வரலாற்று ரீதியாக நட்பு நாடாகும். அந்த நீண்ட வரலாற்றில், சீனா எமக்குள்ள உண்மையான நண்பர் என்பதை நாம் ஒப்புக் கொள்ள வேண்டும் என்று மகிந்த ராஜபக்சே தனது உரையில் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து