முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

எம்.ஜி.ஆர். பிறந்த நாள் விழா: அ.ம.மு.க. சார்பில் 17-ம் தேதி கொண்டாடப்படுகிறது

புதன்கிழமை, 12 ஜனவரி 2022      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை : வரும் 17-ம் தேதி தமிழகம் முழுவதும் அ.ம.மு.க. சார்பில் எம்.ஜி.ஆர். பிறந்த நாள் விழா கொண்டாடப்படுகிறது.

இது குறித்து அ.ம.மு.க. வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறி இருப்பதாவது:-

தமிழ்நாட்டு மக்களின் மனங்களில் நீக்கமற நிறைந்திருக்கும் எம்.ஜி.ஆரின் 105-வது பிறந்த நாள் வரும் 17.1.2022 (திங்கட்கிழமை) அன்று கொண்டாடப்படுகிறது. கொரோனா மற்றும் ஒமைக்ரான் நோய்ப்பரவல் அதிகமாகி வருவதால், அரசின் வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி சமூகப் பொறுப்புணர்வோடு எம்.ஜி.ஆரின் பிறந்த நாளை தமிழகம் முழுவதும் உள்ள அ.ம.மு.க.  அலுவலகங்களிலும், அவரவர் இல்லங்களிலும் கொண்டாடிடுமாறு கட்சியின் உடன்பிறப்புகள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

மேலும் எம்.ஜி.ஆரின் உருவப் படத்தினை அலங்கரித்து வைத்து, மலரஞ்சலி செலுத்தி, அவர்  காட்டிய பாதையில், அம்மா கற்றுத்தந்த உள்ளத்துணிவோடு பயணிக்க உறுதி ஏற்றிடுவோம்.  இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து