முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மனத்தூய்மை, கருணை உள்ளத்தில் நிறைந்திருந்தால் நாடு நலம் பெறும் : ஓ.பி.எஸ். - இ.பி.எஸ். பொங்கல் வாழ்த்து

புதன்கிழமை, 12 ஜனவரி 2022      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை : மனத்தூய்மை, கருணை போன்ற நல்ல எண்ணங்கள், நம் உள்ளத்தில் நிறைந்திருந்தால் நாடு நலமும், வளமும் பெறும் என்று அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர்களான ஓ.பன்னீர் செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோர் பொங்கல் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

பொங்கல் பண்டிகையையொட்டி அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறப்பட்டிருப்பதாவது,  

உலகமெங்கும் வாழ்கின்ற தமிழர்கள் மகிழ்ந்து கொண்டாடும் இனிய பொங்கல் திருநாளில், புதுமை பொங்க, இனிமை தங்க, செல்வம் பெருக, வளமை வளர, அனைவருக்கும் எங்களது உளமார்ந்த பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்களை தெரிவிப்பதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறோம்.

தை முதல் நாளன்று புதுப்பானையில் அரிசியிட்டு பொங்கலோ பொங்கல் என்று மகிழ்ச்சிக் குரல் எழுப்பி, இறைவனை வணங்கி அனைவரும் ஒன்றுபட்டு, வேற்றுமைகளை மறந்து உள்ள மகிழ்ச்சியுடன் பொங்கல் பண்டிகையைக் கொண்டாடுவார்கள். மனத்தூய்மை, அச்சமின்மை, துணிவு, கருணை போன்ற நல்ல எண்ணங்கள், புதுப்பானையில் உள்ள நற்பொங்கல் போன்று நம் உள்ளத்தில் நிறைந்திருந்தால் நாடு நலமும், வளமும் பெறும்.

பிறருக்கு உணவு வழங்கி உண்ண நினைப்பது தெய்வப் பண்பாகும். அனைத்து மக்களுக்கும் உணவு கிடைத்திட அல்லும் பகலும் அயராது பாடுபட்டு வரும் உழவர் பெருமக்கள் தெய்வப் பண்புள்ளவர்கள் ஆவார்கள். இத்தகைய உழவர் பெருமக்கள் வாழ்வில் ஏற்றம் பெற்றிட அம்மாவும், அதனைத் தொடர்ந்து அம்மாவின் அரசும் பல்வேறு நலத்திட்டங்களை தீட்டி, சீரிய முறையில் செயல்படுத்தின.

தமிழர் திருநாளாம் பொங்கல் நன்னாளில், தமிழர்கள் வாழ்வில் அன்பும், அமைதியும் நிலவட்டும். நலமும் வளமும் பெருகட்டும். அனைவருக்கும் உடல் நலத்தையும், மகிழ்ச்சியையும் தரட்டும், கடினமாக உழைத்து வரும் நம் விவசாயப் பெருங்குடி மக்களின் வாழ்வில் வளத்தைக் கொண்டு வந்து சேர்க்கட்டும். எம்.ஜி.ஆர், அம்மா  ஆகியோரது வழியில் மனதார வாழ்த்தி, எங்களுடைய பொங்கல் திருநாள் வாழ்த்துகளை மீண்டும் ஒருமுறை உரித்தாக்கிக் கொள்கிறோம். இவ்வாறு அவர்கள் அதில் தெரிவித்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து