முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பள்ளி ஆசிரியர்களுக்கான இடமாற்ற கலந்தாய்வு: திருத்தப்பட்ட கால அட்டவணையை வெளியிட்டது பள்ளிக் கல்வித்துறை

புதன்கிழமை, 12 ஜனவரி 2022      தமிழகம்
Image Unavailable

தமிழகத்தில் பள்ளிக்கல்வித் துறையின்கீழ் பணிபுரியும் அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு, சுயவிருப்பத்தின் பேரில் இடமாறுதல் கலந்தாய்வு நடத்தப்படுகிறது. அதன்படி, நடப்பாண்டுக்கான இடமாறுதல், பதவி உயர்வு மற்றும் பணி நிரவல் கலந்தாய்வு ஜனவரி 19 முதல் பிப்ரவரி 18-ம் தேதி வரை நடத்தப்படும் என்று பள்ளிக்கல்வித் துறை அறிவித்தது.

இதற்கான எமிஸ் இணையதள விண்ணப்பப் பதிவு கடந்த டிசம்பர் 31-ல் தொடங்கி, ஜன.10-ம் தேதியுடன் நிறைவு பெற்றது. ஆனால், கலந்தாய்வுக்கு எமிஸ் தளம் வழியாக விண்ணப்பங்களை பதிவு செய்வதில் பல்வேறு குளறுபடிகள் ஏற்பட்டன. இதை சரிசெய்யும் பொருட்டு கலந்தாய்வு தேதிகளில் மாற்றம்செய்து, திருத்தப்பட்ட காலஅட்டவணையை பள்ளிக்கல்வித் துறை வெளியிட்டுள்ளது. 

இதுகுறித்த அறிவிப்பில், "ஆசிரியர்கள் விண்ணப்பங்களைப் பதிவு செய்வதற்கான காலஅவகாசம் நேற்று (ஜனவரி 12) வரை நீட்டிக்கப்பட்டது. பதிவுசெய்யப்பட்ட அனைத்து வகை ஆசிரியர்களின் மாறுதல் விண்ணப்பங்களின் முன்னுரிமைப் பட்டியல் ஜன. 19 வெளியிடப்படும். அதில் திருத்தம் இருப்பின், இறுதி முன்னுரிமைப் பட்டியல் ஜன. 22-ல் வெளியிடப்படும்.

அதன்பின், அரசுப் பள்ளி தலைமை ஆசிரியர்கள், முதுநிலை, பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர்களுக்கான இடமாறுதல், பதவி உயர்வு மற்றும் பணிநிரவல் கலந்தாய்வு ஜனவரி 24 முதல்பிப்ரவரி 23-ம் தேதி வரை நடத்தப்படும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 6 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து