முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜல்லிக்கட்டு போட்டி ஆன்லைன் முன்பதிவு நடைமுறையில் குளறுபடி : முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு

புதன்கிழமை, 12 ஜனவரி 2022      தமிழகம்
Image Unavailable

Source: provided

மதுரை : மதுரை மருத்துவக் கல்லூரியில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார், சட்டமன்ற உறுப்பினர் ஐயப்பன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.எஸ். சரவணன் ஆகியோர் தடுப்பூசி செலுத்தி கொண்டனர். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கூறியதாவது,

ஒரு ஆண்டில் 11 மருத்துவ கல்லூரியை உருவாக்கித் தந்த பெருமை எடப்பாடியார் ஓ.பி.எஸ். ஆகியோர் தலைமையிலான அம்மா அரசையே சாரும். குறிப்பாக இந்த 11 மருத்துவ கல்லூரிக்கு 414 ஏக்கர் நிலங்கள் வருவாய்த்துறை சார்பில் மத்திய அரசுக்கு ஒப்படைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து மத்திய அரசு அனுமதி அளித்து அதை ஆராய்ந்து மருத்துவ கட்டிடத்திற்கு தகுதியான இடம் என்று உறுதி அளித்ததால் இன்றைக்கு கட்டிடம் கட்டப்பட்டுள்ளது.  இதற்காக மத்திய அரசு 2140 கோடியை பங்களிப்பாக அளித்துள்ளது. இதுவரை தமிழகத்தில் 37 மருத்துவக் கல்லூரிகள் உள்ளது. இதில் கூடுதலாக 11 மருத்துவக் கல்லூரிகளில் உருவாக்கப்பட்டதன் மூலம் கூடுதலாக 1450 மருத்துவ பணியிடங்கள் கூடுதலாக கிடைக்கும். 

இந்த 11மருத்துவகல்லூரிகளுக்கு  முன்னாள் முதல்வர்கள்   எடப்பாடி பழனிச்சாமி ஓ.பி.எஸ் ஆகியோர் அப்போது அடிக்கல் நாட்டினார். தற்போது பாரதப்பிரதமர் காணொளி காட்சி மூலம் திறந்து வைத்துள்ளார். ஆகவே பிரதமருக்கும், முன்னாள் முதல்வர்கள் எடப்பாடியாருக்கும், ஓ. பன்னீர் செல்வத்திற்கும் அம்மா பேரவை சார்பில் சார்பில் நன்றியினை தெரிவித்துக் கொள்கிறோம்

ஜல்லிக்கட்டு பாரம்பரிய விளையாட்டு, அதை தடையில்லாமல் நடத்த வேண்டும். ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்த அறிவிக்கப்பட்டுள்ள ஆன்லைன் முன்பதிவு நடைமுறையில் பல்வேறு குளறுபடிகள் நடக்க வாய்ப்புள்ளது. தகுதி உள்ள வீரர்கள், மாடுகளுக்கு வாய்ப்பு மறுக்கப்படலாம் எனும் அச்சம் நிலவுகிறது. தகுதியுள்ள காளைகள் போட்டியில் பங்கேற்க உரிய வழிகாட்டுதலை மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசின் வழிகாட்டு நெறிமுறைகள் முரண்பாடுகள் நிறைந்ததாக உள்ளது. இதை முறைப்படுத்த வேண்டும். எய்ம்ஸ் மருத்துவமனையை குறிப்பிட்டு செங்கல் வைத்து விளம்பரம் தேடிய தி.மு.க அரசு, இதுவரை ஒரு செங்கலை கூட நடவில்லை. அ.தி.மு.க. அரசின் திட்டங்கள் மூலம் புகழ்  தேட நினைக்கிறார்கள். இவ்வாறு அவர்  கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து