முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தடுப்பூசி செலுத்தாதவர்களை கைது செய்ய பிலிப்பைன்ஸ் அதிபர் உத்தரவு

சனிக்கிழமை, 15 ஜனவரி 2022      உலகம்
Image Unavailable

கொரோனா தடுப்பூசியை செலுத்திக் கொள்ளாதவர்கள் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என்றும், இதை மீறுபவர்கள் கைது செய்யப்படுவார்கள் என்றும் பிலிப்பைன்ஸ் அதிபர் தெரிவித்துள்ளார்.

பிலிப்பைன்ஸ் நாட்டில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. வைரஸ் பரவலை கட்டுப்படுத்த அந்நாட்டு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மக்கள் தடுப்பூசிகளை செலுத்திக் கொள்ள வேண்டும் என்று அரசு தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறது. மேலும் தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்களுக்கு எச்சரிக்கை விடுத்து வருகிறது. அதன்படி தடுப்பூசி செலுத்தாதவர்கள் அவர்கள் பொதுப் போக்குவரத்தை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. தடுப்பூசி செலுத்தாதவர்கள், பொது மக்களுக்கு ஆபத்தானவர்கள் என்று அரசு குற்றம்சாட்டி உள்ளது.

இந்த நிலையில் தடுப்பூசி செலுத்தி கொள்ளாதவர்களை கைது செய்ய பிலிப்பைன்ஸ் அரசு முடிவு செய் துள்ளது.   இது குறித்து பிலிப்பைன்ஸ் அதிபர் டொடி ரிஹோ டுடர்டி கூறும் போது, 

கொரோனா தடுப்பூசியை செலுத்திக் கொள்ளாதவர்கள் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதை மீறுபவர்கள் கைது செய்யப்படுவார்கள் என்று தெரிவித்துள்ளார். இது தொடர்பான உத்தரவையும் அவர் பிறப்பித்துள்ளார். இதையடுத்து தடுப்பூசி செலுத்தாதவர்கள் பட்டியலை அதிகாரிகள் சேகரிக்க தொடங்கி உள்ளனர். அரசின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிட்டவுடன் தடுப்பூசி செலுத்தி கொள்ளாதவர்கள் பட்டியலை தயாரிக்கும் பணி வேகமாக நடைபெறும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து