முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நோய்வாய்பட்ட சிறுவனுக்கு பதிலாக பள்ளிக்கு சென்று பாடம் படிக்கும் ரோபோ

சனிக்கிழமை, 15 ஜனவரி 2022      உலகம்
Image Unavailable

ஜெர்மன் தலைநகர் பெர்லின் மாநகரில் அமைந்துள்ளது புஸ்டெப்ளூம்-கிரண்ட்சூல் தனியார் பள்ளி. இதில் படிக்கும் 7 வயது மாணவன் ஜோசுவா மார்டினாஞ்செலி, நுரையீரல் பாதிப்பு நோயால் அவதிப்பட்டு வருகிறான். இதனால் அவனால் தினமும் பள்ளிக்கு செல்ல முடியவில்லை என்று ஜோசுவா தாயார்  சிமோன் மார்டினாஞ்செலி வருத்தம் தெரிவித்துள்ளார். 

இதனை அறிந்த  மர்ஷான் ஹெல்லர் மாவட்ட நிர்வாகம் சிறப்பு ஏற்பாடு ஒன்றை செய்துள்ளது. அதன்படி செயற்கை நுண்ணறிவுடன் கூடிய ரோபோ ஒன்று வாங்கப்பட்டு,  மாணவன் ஜோசுவாவுக்கு பதிலாக பள்ளிக்கு சென்று பாடம் படிக்க ஏற்பாடு செய்யப்பட்டது. இப்போது மாணவன் ஜோசுவா அந்த ரோபோ மூலம் பள்ளி ஆசிரியர் மற்றும் தமது வகுப்பு தோழர்களை தொடர்பு கொள்ள முடிகிறது. ஜோசுவா அனுப்பும் தகவல்களை அந்த ரோபோ பிரதிபலிக்கிறது.  பாடவேளை இல்லாத சில சமயங்களில் ரோபோ மூலம் ஜோசுவா தமது தோழர்களுடன் அரட்டை அடிக்க முடிகிறது என பள்ளி தலைமை ஆசிரியர் வின்டர்பெர்க் தெரிவித்துள்ளார்.  

கொரோனா தொற்று பரவல் காரணமாக பள்ளிக்கு வர முடியாத குழந்தைகளுக்காக ரோபோக்களை பயன்படுத்தும் திட்டத்தை செயல்படுத்தி உள்ளதாக மாவட்ட கல்வி அதிகாரி  டார்ஸ்டன் குஹ்னே தெரிவித்துள்ளார். பெர்லின் பள்ளிகளுக்காக நான்கு ரோபோக்கள் வாங்கப்பட்டுள்ளதாகவும்,  தொற்று பரவல் காலத்திற்கு மட்டுமின்றி எதிர்காலத்திலும் இது போன்ற மாற்றங்களுக்கு இது பயன்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து