முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரேசன் கடைகளில் நாளை பொங்கல் பரிசு தொகுப்பு பெற்று கொள்ளலாம்

சனிக்கிழமை, 15 ஜனவரி 2022      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை : பொங்கல் பரிசுத் தொகுப்பு பெறாத தகுதியுள்ள அரிசி குடும்ப அட்டைதாரர்கள், 17-ம் தேதி திங்கள்கிழமை காலை 7.00 மணி முதல் பொங்கல் பரிசுத் தொகுப்பினை நியாய விலைக் கடைகளில் பெற்றுக் கொள்ளலாம் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. 

இது குறித்து அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது,  

கூட்டுறவுச் சங்கங்களின்  பதிவாளர் அறிவுறுத்தியவாறு, 16-ம் தேதியன்று  தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்  கழக கிடங்குகளிலிருந்து இணைப்பதிவாளர், சென்னை தெற்கு மண்டல கட்டுப்பாட்டில் செயல்படும் கூட்டுறவு நியாய  விலைக் கடைகளுக்கு பொங்கல்  பரிசுத் தொகுப்பு வரவேண்டிய  நிலுவையுள்ள  நியாய விலைக்  கடைகள்  மட்டும் காலை 9.00 மணி முதல் மதியம் 1.00 மணி வரை திறந்து, பொங்கல் பரிசுத் தொகுப்பினை கடைகளில் இறக்கும் பணி நடைபெறும்.

17-ம் தேதியன்று  காலை  7.00 மணி  முதல்  இணைப்பதிவாளர், சென்னை  தெற்கு மண்டல கட்டுப்பாட்டில் உள்ள நியாய விலைக் கடைகள் திறந்து செயல்படும்.  இதுவரை பொங்கல் பரிசுத் தொகுப்பு பெறாத தகுதியுள்ள அரிசி குடும்ப அட்டைதாரர்கள், 17-ம் தேதி திங்கள்கிழமை காலை 7.00 மணி முதல் பொங்கல் பரிசுத் தொகுப்பினை நியாய விலைக் கடைகளில் பெற்றுக் கொள்ளலாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து