முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டெஸ்ட் கிரிக்கெட் அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்து கோலி ராஜினாமா

சனிக்கிழமை, 15 ஜனவரி 2022      விளையாட்டு
Image Unavailable

இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்து விலகுவதாக விராட் கோலி அறிவித்துள்ளார்.

இந்திய அணியின் அனைத்து வகை கிரிக்கெட் போட்டிகளுக்கும் கேப்டனாக இருந்து வந்த விராட் கோலி கடந்த டி20 உலகக் கோப்பையுடன் டி20 கேப்டன் பொறுப்பிலிருந்து விலகுவதாக அறிவித்தார். ஐ.பி.எல் கிரிக்கெட்டில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்து விலகினார்.  இதையடுத்து, மிகுந்த சர்ச்சைகளுக்கு மத்தியில் ஒருநாள் கிரிக்கெட் அணிக்கான கேப்டன் பொறுப்பிலிருந்து கோலி நீக்கப்பட்டார்.   இதைத் தொடர்ந்து, தென் ஆப்பிரிக்காவுடனான டெஸ்ட் தொடரில் இந்திய அணி விளையாடியது. இதில் இந்திய அணி 1-2 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரை இழந்தது.  இந்த நிலையில், டெஸ்ட் கேப்டன் பொறுப்பிலிருந்தும் விலகுவதாக கோலி அறிவித்துள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து