முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மனித நேயத்தின் வழிகாட்டியாக வாழ்ந்தவர் எம்.ஜி.ஆர்.

ஞாயிற்றுக்கிழமை, 16 ஜனவரி 2022      தமிழகம்
Image Unavailable

Source: provided

எம்.ஜி.ஆரின் 105-வது பிறந்த நாள் அ.தி.மு.க.வினரால் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி எண்ணற்ற நலத்திட்ட உதவிகள் கட்சியினரால் வழங்கப்படுகின்றன. எம்.ஜி.ஆர். பிறந்தநாளை ஏழை மக்களின் இன்பத் திருநாளாகவும் நாடெங்கிலும் மக்கள் தங்கள் இல்லத்து விழாவாகவும் நடத்தி வருகின்றனர். கோடிக்கணக்கான மக்களை ஈர்க்கும் காந்த சக்தியாக விளங்கியதோடு பல தலைமுறை கடந்தும் காலத்தை வென்ற தலைவராக அவர் திகழ்வதற்கு காரணம் வாரி, வாரி வழங்கிய வள்ளலாக மனிதநேயத்தின் வழிகாட்டியாக வாழ்ந்ததே ஆகும்.

இலங்கையிலுள்ள கண்டியில் 17-01-1917-ல் பிறந்தார் எம்.ஜி.ஆர். 2 1/2 வயதில் தனது தந்தையை இழந்த பின் தாயுடன் தமிழ்நாட்டிற்கு வந்து வறுமை காரணமாக 3-ம் வகுப்பில் படிக்கும் போதே படிப்பை தொடரமுடியாமல் நாடக கம்பெனியில் சேர்ந்து படிப்படியாக முன்னேறி திரையுலகில் நுழைந்து கலைத்துறையில் முடிசூடா மன்னனாக திகழ்ந்தார். பின்னர் அரசியலிலும் தனி முத்திரை பதித்தார். ஏழை எளிய மக்களின் ஏகோபித்த ஆதரவை பெற்று 1967-ல் பேரறிஞர் அண்ணா ஆட்சி அமைக்க முக்கிய காரணாமாக திகழ்ந்தார். அவர் மறைவுக்குப் பின் அவரது கொள்கையை காக்க அ.தி.மு.க வை துவக்கினார். அண்ணா மறைவிற்கு பின் கருணாநிதி முதல்வராக எம்.ஜி.ஆர். அளித்த ஆதரவே முக்கிய காரணம்.

பின்னர் 1977-ல் அ.தி.மு.க மாபெரும் வெற்றி பெற்று தமிழக முதல்வரானார். தொடர்ந்து 10 ஆண்டுகள் முதல்வராக இருந்து சத்துணவுத் திட்டம், முதியோர் உதவித் தொகை உள்ளிட்ட பல நல்ல திட்டங்களை கொண்டுவந்தார்.

தன்னை தேடிவரும் எளியோருக்கு உணவளித்து படிப்பிடிப்பு முடிந்தவுடன் அங்கு உழைத்த அனைவருக்கும் உரிய நிதிஉதவி அளித்தும் செல்லும் இடமெல்லாம் மக்களுக்கு தான் உழைத்து சம்பாதித்து பணத்தை வாரி வாரி கொடுத்து தனது இறுதி மூச்சுவரை மனிதநேய பண்பாற்றி மனித குலத்தின் வழிகாட்டியாக திகழ்ந்தார். அவரால் சுட்டிக்காட்டப்பட்ட அம்மாவும் கழகத்தை கட்டிக் காத்தார். அந்த கழகத்தை நாமும் காப்போம் அண்ணாவின் கொள்ளைகளை எம்.ஜி.ஆர். வழியில் கட்டிக்காக்க அவரது பிறந்தநாளான இன்று சபதமேற்போம்.

எஸ்.முத்துமணி 

முன்னாள் எம்.பி.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து