முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பா.ஜ.கவில் இணையும் முன்னாள் அதிகாரிகள்: தேர்தல் ஆணையத்துக்கு அகிலேஷ் யாதவ் கேள்வி

ஞாயிற்றுக்கிழமை, 16 ஜனவரி 2022      இந்தியா
Image Unavailable

Source: provided

லக்னோ : முன்னாள் ஐ.பி.எஸ் அதிகாரிகள் பலரும் பா.ஜ.கவில் இணைந்து வரும் நிலையில் இதற்கு சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். மேலும், தேர்தல் ஆணையத்திற்கு சரமாரி கேள்வி எழுப்பியுள்ளார்.

கான்பூர் காவல்துறை ஆணையரான அசீம் அருண் ஐ.பி.எஸ், கடந்த மாதம் கட்டாய ஓய்வு பெற்றார். இவர் நேற்று அதிகாரபூர்வமாக பா.ஜ.கவில் இணைந்துள்ளார். கான்பூரின் அருகிலுள்ள கன்னோஜ் நகர தொகுதியில் அசீம் அருண் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மக்களவை தொகுதியில் உ.பி.யின் முன்னாள் முதல்வர் அகிலேஷ்சிங் எம்.பி.யாக இருந்தவர். யாதவர்கள் அதிகமுள்ள கன்னோஜ், சமாஜ்வாதி ஆதரவு தொகுதியாகக் கருதப்படுகிறது.

இங்கு அசீமிற்கு கடும் போட்டி இருக்கும் சூழலும் நிலவுகிறது. ஐ.பி.எஸ் அதிகாரியாக இருந்த அசீம், முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் பணியால் கவர்ந்து இந்த முடிவை எடுத்ததாகத் தெரிவித்திருந்தார். இதுமட்டுமின்றி முன்னாள் ஐ.பி.எஸ், ஐஏஎஸ் அதிகாரிகள் பலரும் பா.ஜ.கவில் இணைந்து வருகின்றனர்.

முன்னாள் ஐ.பி.எஸ் அதிகாரி அசிம் அருண் பா.ஜ.கவில் இணைந்ததற்கு சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது., ‘‘அசிம் அருணுடன் பா.ஜ.கவில் இணைந்த அனைத்து அதிகாரிகளையும் நீக்க தேர்தல் ஆணையத்தில் புகார் செய்வேன். இந்த விவகாரத்தை விசாரிக்காவிட்டால் தேர்தல் ஆணையம் மீது கேள்விகள் எழும். தேர்தல் ஆணையம் நியாயமாக செயல்படுகிறது என்பதை நாங்கள் நம்ப மாட்டோம்’’ எனக் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து