முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழகத்தில் அதிகரிக்கும் கொரோனா தொற்று: மருத்துவ பரிசோதனை செய்யாமல் வீட்டு தனிமைக்கு அனுமதிக்கக்கூடாது : மாவட்ட கலெக்டர்களுக்கு சுகாதாரத்துறை செயலர் உத்தரவு

ஞாயிற்றுக்கிழமை, 16 ஜனவரி 2022      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை : தமிழகத்தில் அதிகரிக்கும் கொரோனா தொற்றை அடுத்து, பாதிக்கப்பட்டவரை மருத்துவ பரிசோதனை செய்யாமல் வீட்டு தனிமைக்கு அனுமதிக்கக்கூடாது என்று மாவட்ட கலெக்டர்களுக்கு சுகாதாரத்துறை செயலர் உத்தரவிட்டுள்ளார். மேலும், கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவ மனைகள் 48 மணி நேரத்துக்கு தேவையான மருத்துவ ஆக்சிஜனை கையிருப்பில் வைத்திருக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும் மருத்துவத் துறை செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன் ஒரு சுற்றறிக்கையை அனுப்பி உள்ளார். அதில் கூறி இருப்பதாவது., 

கொரோனா பாதித்தவரை உரிய மருத்துவ பரிசோதனை இல்லாமல் வீட்டுத் தனிமைக்கு அனுமதிக்கக்கூடாது. அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா தடுப்பு மையங்களை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். கொரோனா தடுப்பு நெறிமுறைகளை மக்கள் பின்பற்றுவதை உறுதிப்படுத்த வேண்டும்.

அடுத்த அலையில் இறப்பை பெருமளவில் குறைக்க வேண்டும். யாரை பரிசோதிக்க வேண்டும், யாரை பரிசோதிக்க வேண்டாம் என ஐ.சி.எம்.ஆர். கொடுத்துள்ள வழிகாட்டு நெறிமுறைகளை முறையாகக் கடைப்பிடிக்க வேண்டும். நோய் அறிகுறி இல்லாதவர்களை பரிசோதிக்க வேண்டாம். தொற்று உறுதியாகிய நபர்கள் தொடர்புடைய இடங்களில் கூடுதல் கவனம் தேவை.

அனைத்து மருத்துவமனைகளும் தற்போது கைவசம் உள்ள ஆக்சிஜன் சிகிச்சை, சேவைகளை உடனே மதிப்பிட வேண்டும். உள்கட்டமைப்பை ஆராய்ந்து, திரவ மருத்துவ ஆக்சிஜன் நிரப்பும் வசதி, வினியோகம் தங்கு தடையின்றி கிடைப்பது உறுதி செய்யப்பட வேண்டும். கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவ மனைகள் 48 மணி நேரத்துக்கு தேவையான மருத்துவ ஆக்சிஜனை கையிருப்பில் வைத்திருக்க வேண்டும். ஆக்சிஜன் சிலிண்டர், அதனை மீண்டும் நிரப்புவதற்கான அமைப்பு குறித்து ஆராய வேண்டும். வெண்டி லேட்டர் வசதி ஏற்படுத்த வேண்டும் என அதில் தெரிவித்து உள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து