முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கை: தமிழகம் முழுவதும் தயார் நிலையில் 1.91 லட்ச மருத்துவ படுக்கைகள் : அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

ஞாயிற்றுக்கிழமை, 16 ஜனவரி 2022      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை : கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்க தமிழகம் முழுவதும் 1,91,000 படுக்கைகள் உள்ள நிலையில் அதில் 8,912 பேர் மட்டுமே மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதாக மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் அமைந்துள்ள கொரோனா சிகிச்சை மையத்தில் அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், தா.மோ.அன்பரசன், மருத்துவத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி உள்ளிட்டோர் ஆய்வு மேற்கொண்டனர்.

பின்னர் அமைச்சர் மா.சுப்பிரமணியன் பத்திரிகையாளர் மத்தியில் பேசினார். அப்போது அவர் தெரிவிக்கையில், “தமிழ்நாட்டில் மொத்தமாக 1.91 லட்சம் படுக்கைகள் உள்ளது. ஆனால் மருத்துமனையில் இதுவரை 8,912 பேர் மட்டுமே சிகிச்சையில் உள்ளனர்.

நந்தம்பாக்கம் கோவிட் சிகிச்சை மையத்தில் 950 படுக்கைகள் பயன்பாட்டில் உள்ளது. இவற்றில் 350 படுக்கைகள் முன்களப்பணியாளர்களான அரசு அலுவலர்கள், காவல் துறையினற்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. வீட்டு தனிமையில் உள்ளவர்களை கண்காணிக்க 1535 களப்பணியாளர்கள் சென்னை மாநகராட்சி சார்பில் கோவிட் பணிக்காக ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இதுவரை கிடைத்த கள நிலவரத்தின்படி, இரண்டு தவணை செலுத்தி கொண்டவர்கள் இறப்பின் நிலைக்கு செல்லவில்லை. தடுப்பூசி செலுத்த கொள்ளாதவர்கள் இருக்கக்கூடிய சூழல் உள்ளது. ஆகவே உயிர் காக்கும் ஆயுதமாக செயல்படும் தடுப்பூசியை மக்கள் அனைவரும் உணர்ந்து தவறாமல் செலுத்திக்கொள்ள வேண்டும். 

தமிழகத்தில் சென்னையில் மட்டும் 37,991 பேர் வீட்டு தனிமையில் உள்ளனர். குறைவான நபர்களே கோவிட் சிகிச்சை மையத்திற்கு வருகின்றனர். பெரும்பான்மையானோர் வீட்டு தனிமையில் உள்ளனர். கோவிட் தொற்று பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெரும் அளவில் குழந்தைகள் ஒருவர் கூட இல்லை. ஆகவே அச்சம் வேண்டாம். இங்கு இப்போது கொண்டாட்டங்களை தாண்டி உயிர்தான் முக்கியம். எனவே கடற்கரைக்கு செல்வதை தவிர்த்து மக்கள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும்” என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து