முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நாய் சேகர் விமர்சனம்

திங்கட்கிழமை, 17 ஜனவரி 2022      சினிமா
Image Unavailable

Source: provided

தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகரான சதீஸ் நாயனாக அறிமுகமாகியிருக்கும் படம் நாய் சேகர். ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்திருக்கும் இப்படத்தை அறிமுக இயக்குர் கிஷோர் ராஜ்குமார் இயக்கியிருக்கிறார். பவித்ரா லட்சுமி நாயகியாகவும் ஜார்ஜ் மரியம், ஸ்ரீமன், லிவிங்ஸ்டன், இளவரசு உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்துள்ளனர். இசையமைப்பாளர் சங்கர் கணேஷ் வில்லனாக திரையில் தோன்றி பாடல்கள் பாடி அசத்துகிறார். ஜார்ஜ் மரியத்தின் ஆராய்சியில் நடந்த குளருபடியினால் நாய் மனிதனாகவும் மனிதன் நாயாகவும் மாறிவிடுகிறார்கள். அதன் பிறகு நடக்கும் கலகல கலாட்டாக்களின் ஜாலியான திரைத்தொகுப்புதான் இந்த நாய் சேகர். அனிருத்தின் இசையில் வந்திருக்கும் பாடல் முணுமுணுக்க வைக்கிறது. சாண்டி மாஸ்டரின் நாய் ஸ்டைல் நடனம் ரசிக்க வைக்கிறது. சதீஸ் நன்றாக நடனம் ஆடியிருக்கிறார். கதையின் முக்கிய பாத்திரமாக லேப்ரடார் நாயைத் தான் சொல்ல வேண்டும். இந்த நாய்க்கு மிர்ச்சி சிவா குரல் வழங்கியிருக்கிறார். சிவாவின் குரலாகட்டும் மற்ற காட்சிகளிலாகட்டும் ஆங்காங்கே நகைச்சுவை வெடிக்கிறது. சதிஸ், பவித்ரா லட்சிமி இருவருக்கும்  இடையே இருக்கும் கெமிஸ்ட்ரியும் அவர்களது நடிப்பும் படத்தை தாங்கி பிடிக்கிறது. ஜாலியான நிறைவான சினிமாவாக வந்திருக்கும் நாய் சேகர் படத்தை தாராளமாக குடும்பத்துடன் சென்று கண்டு ரசிக்கலாம்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து