முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தொண்டி அருகே நெகிழ்ச்சி சம்பவம்: 119-வது பிறந்தநாளை கொண்டாடிய 4 தலைமுறைகளை கண்ட மூதாட்டி

திங்கட்கிழமை, 17 ஜனவரி 2022      தமிழகம்
Image Unavailable

தொண்டி அருகே 4 தலைமுறைகளை சேர்ந்த குடும்பத்தினருடன் தனது 119-வது பிறந்தநாளை கேக் வெட்டியும், பட்டாசு வெடித்தும் மூதாட்டி கொண்டாடினார்.

ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகே உள்ள பாப்பனக்கோட்டை கிராமத்தைச் சேர்ந்த கருப்பையா என்பவரின் மனைவி லட்சுமி அம்மாள். 119 வயது மூதாட்டியான லட்சுமி அம்மாளுக்கு 2 மகன்கள், 1 மகள் உள்ளனர். மேலும் பேரன், பேத்தி, கொள்ளுப்பேரன், கொள்ளப்பேத்தி என 50-க்கும் மேற்பட்டோர் உள்ளனர். 20 வருடங்களுக்கு முன்பு கருப்யையா இறந்து விட்டார். இந்த நிலையில் 119-வது வயதை தனது உறவுகளுடன் கேக் வெட்டியும், பட்டாசு வெடித்தும் லட்சுமி அம்மாள் கொண்டாடினார்.

இதில் 4 தலைமுறைகளை சேர்ந்த குடும்பத்தினர் பங்கேற்றனர். இவர் தற்போது வரை கம்பு, கேழ்வரகு என தானிய வகைகளை சாப்பிட்டு வருகிறார். அதிகாலையிலேயே எழுந்து தன்னால் முடிந்த வீட்டு வேலைகளை செய்து வருகிறார். இவரது வாழ்க்கை முறை தற்போதுள்ள இளைஞர்களுக்கு எடுத்துக்காட்டாக விளங்குகிறது. இவரது கணவர் இறந்து 20 ஆண்டுகள் ஆகியும் தன்னம்பிக்கையுடன், கொரோனா காலத்திலும் தன்னால் முடிந்த பணிகளைச் செய்து உழைப்போடும், இயற்கையோடும் லட்சுமி அம்மாள் வாழ்ந்து வருகிறார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து