முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்: தமிழகத்தில் 138 நகராட்சி தலைவர் பதவிக்கான இட ஒதுக்கீடு அறிவிப்பு

செவ்வாய்க்கிழமை, 18 ஜனவரி 2022      தமிழகம்
Image Unavailable

தமிழ்நாட்டில் 138 நகராட்சிகள் உள்ளன. விரைவில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட உள்ள நிலையில் நகராட்சிகளின் தலைவர் பதவிகளுக்கான இடஒதுக்கீட்டை அறிவித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில் கூறி இருப்பதாவது.,

ஆதிதிராவிடர்களில் பொது பிரிவினருக்கு (ஆண் அல்லது பெண்) கொடைக்கானல் (திண்டுக்கல்), தாராபுரம் (திருப்பூர்), நாமக்கல் (நாமக்கல்), மானாமதுரை (சிவகங்கை,), நரசிங்கபுரம் (சேலம்), பூஞ்சை புளியம்பட்டி (ஈரோடு), ஒட்டன் சத்திரம் (திண்டுக்கல்), ஜெயங்கொண்டம் (அரியலூர்), திட்டக்குடி (கடலூர்), உளுந்தூர்பேட்டை (கள்ளக்குறிச்சி) ஆகியவை ஒதுக்கீடு செய்யபட்டுள்ளன.

ஆதிதிராவிடர் பெண்களுக்கு ஜோலார்பேட்டை (திருப்பத்தூர்), களக்காடு (திருநெல்வேலி), மாங்காடு (காஞ்சிபுரம்), புளியங்குடி (தென்காசி), கூடலூர் (நீலகிரி), மேட்டூர் (சேலம்), திருப்பத்தூர் (திருப்பத்தூர்), பொன்னேரி (திருவள்ளூர்) ஆகியவை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பழங்குடியின வகுப்பு பெண்ணுக்கு நெல்லியாளம் (நீலகிரி) நகராட்சி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

அதைத்தவிர பொதுப் பிரிவு பெண்களுக்கு ராணிப்பேட்டை (ராணிப்பேட்டை), கூத்தாநல்லூர் (திருவாரூர்), ஆதிராம்பட்டிணம் (தஞ்சாவூர்), ராசிபுரம் (நாமக்கல்), குன்னூர் (நீலகிரி), திருவாரூர் (திருவாரூர்), உதகமண்டலம் (நீலகிரி), முசிறி (திருச்சி), திருத்துறைப்பூண்டி (திருவா ரூர்), செங்கோட்டை (தென்காசி), பள்ளப்பட்டி (கரூர்), வாலாஜாபேட்டை (ராணிப்பேட்டை), நெல்லிக்குப்பம் (கடலூர்), பேராணம் பட்டு (வேலூர்), சீர்காழி (மயிலாடுதுறை), பழனி (திண்டுக்கல்), வாணியம்பாடி (திருப்பத்தூர்),

மேட்டுப் பாளையம் (கோவை), ஆத்தூர் (சேலம்), அரக்கோணம் (ராணிப்பேட்டை), செங்கல்பட்டு (செங்கல்பட்டு), மதுராந்தகம் (செங்கல்பட்டு), போடிநாயக்கனூர் (தேனி), குளித்தலை (கரூர்), திருநின்றவூர் (திருவள்ளூர்) கிருஷ்ணகிரி (கிருஷ்ணகிரி), அரியலூர் (அரியலூர்), திருச்செந்தூர் (தூத்துக்குடி), ராஜபாளையம் (விருதுநகர்), ஆற்காடு (ராணிப்பேட்டை), அருப்புக்கோட்டை (விருது நகர்), திருமங்கலம் (மதுரை), பெரியகுளம் (தேனி), பெரம்பலூர் (பெரம்பலூர்),

தர்மபுரி (தர்மபுரி) வால்பாறை (கோவை), மதுக்கரை (கோவை), பொள்ளாச்சி (கோவை), சங்கரன் கோவில் (தென்காசி), விழுப்புரம் (விழுப்புரம்), கம்பம் (தேனி), பட்டுக்கோட்டை (தஞ்சாவூர்), பல்லடம் (திருப்பூர்), கொல்லங்கோடு (கன்னியா குமரி), சின்னமனூர் (தேனி), சத்தியமங்கலம் (ஈரோடு),

கூடலூர் (தேனி), பவானி (ஈரோடு), திருத்தணி (திருவள்ளூர்), திண்டிவனம் (விழுப்புரம்), காரமடை (கோவை), வெள்ளக்கோவில் (திருப்பூர்), சோளிங்கர் (ராணிப்பேட்டை), புதுக்கோட்டை (புதுக்கோட்டை), அல்லி நகரம் (தேனி), பூந்தமல்லி (திருவள்ளூர்), உசிலம்பட்டி (மதுரை) ஆகிய நகராட்சிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

மற்ற நகராட்சிகள் அனைத்தும் பொதுப் பிரிவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இங்கு யார் வேண்டு மானாலும் போட்டியிடலாம். அதற்கான அரசாணையை நகராட்சி நிர்வாகத்துறை செயலாளர் சிவ்தாஸ் மீனா வெளியிட்டுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து