முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சென்னை மாநகராட்சியில் 200 வார்டுகளின் இடஒதுக்கீடு குறித்து அரசிதழில் வெளியீடு

செவ்வாய்க்கிழமை, 18 ஜனவரி 2022      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை : சென்னை மாநகராட்சியில் 200 வார்டுகளுக்கான இடஒதுக்கீடு குறித்து அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. 

நகர்ப்புற ஊரக உள்ளாட்சி தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதில் சென்னை மாநகராட்சி மேயர் பதவி பட்டியலின பெண்ணுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. எனவே சென்னை மேயராகப் போகும் முதல் பெண் பட்டியலினத்தவர் யார் என்ற எதிர்பார்ப்பு இப்போதே ஏற்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சியில் மொத்தம் 200 வார்டுகள் உள்ளன. அதில் 16 வார்டுகள் பட்டியலின பொது பிரிவினருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. அந்த வார்டுகள் வருமாறு:- வார்டு எண்: 3, 16, 17, 18, 21, 22, 24, 45, 62, 72, 73, 99, 108, 117, 144, 200. 16 வார்டுகள் பட்டியலின பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. அந்த வார்டுகள் விவரம் வருமாறு:- 28, 31, 46, 47, 52, 53, 59, 70, 74, 77, 85, 111, 120, 135, 159, 196.

இதுதவிர பெண்கள் பொது பிரிவினருக்கு 84 வார்டுகள் ஒதுக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் மொத்தம் உள்ள 200 வார்டுகளில் 100 வார்டுகள் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. மேயரை கவுன்சிலர்கள் வாக்களித்து தேர்வு செய்வார்கள். எனவே பட்டியலினத்தவருக்கு ஒதுக்கப்பட்டுள்ள 32 வார்டுகளில் இருந்து வெற்றிபெறும் ஒரு பெண்தான் மேயராக வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதேநேரம் பொது வார்டிலும் பட்டியலினத்தை சேர்ந்த பிரபலமான பெண்மணிகளை நிறுத்தி வெற்றிபெற செய்தும் வரலாறு படைக்கலாம். வேட்பாளர்கள் அறிவிப்பு, கவுன்சிலர்கள் தேர்வுக்கு பிறகே அந்த ரகசியம் வெளிவரும். இதற்கிடையே நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்காக சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 200 வார்டுகளுக்கான இட ஒதுக்கீடு விபரங்கள் அறிவிக்கப்பட்டு, அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. மொத்தமுள்ள வார்டுகள் எண்ணிக்கையில் 50சதவீதம் பெண்களுக்கு ஒதுக்கீடு என்ற அடிப்படையில், சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட மொத்தமுள்ள 200 வார்டுகளில் 100 வார்டுகள் பெண்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

பட்டியலின பெண்களுக்கு 16 வார்டுகளும், பொதுப்பிரிவு பெண்களுக்கு 84 வார்டுகளும் ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் 16 வார்டுகள் பட்டியலின பொதுப்பிரிவினருக்கு என பட்டியலினத்தவருக்கு மட்டும் 32 வார்டுகள் ஒதுக்கப்பட்டுள்ளன. எந்தெந்த வார்டுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்ற விபரங்களும், அரசிதழில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து