தமிழ்நாடு இந்து சமய மற்றும் அறநிலையத்துறையில் உள்ள 'நிர்வாக அதிகாரி (நிலை -III)' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சென்னை தலைமைச் செயலகத்தில், ஆவின் நிறுவனத்தால் புதியதாக தயாரிக்கப்பட்ட பிரீமியம் மில்க் கேக், யோகர்ட் பானம் (மாம்பழம் மற்றும் ஸ்ட்ராபெரி சுவையில்), பாயாசம் மிக்ஸ், பால் புரத நூடுல்ஸ் மற்றும் டெய்ரி ஒய்ட்னர் ஆகிய ஐந்து புதிய பொருட்களை விற்பனைக்காக முதல்வர் மு.க. ஸ்டாலின் நேற்று அறிமுகம் செய்து வைத்தார்.
ஆவின் நிறுவனம் தரம் ஒன்றையே குறிக்கோளாக கொண்டு 4.20 லட்சம் பால் உற்பத்தியாளர்களிடம் நேரடியாக கொள்முதல் செய்து பால் மற்றும் பால் பொருட்களை நுகர்வோர்களுக்கு நியாயமான விலையில் வழங்கி, கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேல் பால் விற்பனையில் தமிழகத்தில் முன்னோடியாக திகழ்ந்து வருகிறது. தமிழக முதல்வராக மு.க. ஸ்டாலின் பொறுப்பேற்றவுடன், ஆவின் உற்பத்தி பொருட்கள் லாபம் ஈட்ட வழிவகைகளை ஆராய வலியுறுத்தியதன் அடிப்படையில், அவின் நிறுவனம் பல்வேறு புதிய உப பொருட்களை ஆவின் நிறுவனத்தின் மேம்பாட்டுக்காக அறிமுகப்படுத்தி வருகிறது.
அந்த வகையில் ஆவின் நிறுவனத்தின் சார்பில், ஐந்து புதிய பொருட்களை முதல்வர் நேற்று அறிமுகம் செய்து வைத்தார்.
பிரீமியம் மில்க் கேக்
ஆவின் நிறுவனம் தற்போது பால்கோவா, மைசூர்பா, ரசகுல்லா மற்றும் குலாப்ஜாமுன் போன்ற இனிப்பு பொருட்களை நுகர்வோர்களுக்கு ஏற்ற வகையில் தயாரித்து விற்பனை செய்து வருகிறது. தற்போது இனிப்பு பிரியர்களின் விருப்பத்திற்கு ஏற்ப பிரீமியம் மில்க் கேக் தயாரித்து 250 கிராம் ரூ.100/- என்ற விலையில் அறிமுகப்படுத்தப்படுகிறது. இந்த இனிப்பு வகை தரம் மிகுந்த பால் பவுடர் மற்றும் ஆவின் அக்மார்க் நெய் உபயோகித்து தயாரிக்கப்பட்டுள்ளது.
யோகர்ட் பானம்
இளைஞர்களை கவரும் வகையில் யோகர்ட் பானம் மாம்பழம் மற்றும் ஸ்ட்ராபெரி சுவையில் தயாரிக்கப்பட்டு 200 மி.லி. அளவு கொண்ட பாட்டில் ரூ. 25/- என்ற விலையில் அறிமுகப்படுத்தப்படுகிறது. இந்த பானம் உடலுக்கு புத்துணர்ச்சி மற்றும் ஜீரண சக்தி மேம்படும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது.
பாயாசம் மிக்ஸ்
பண்டிகை மற்றும் விசேஷ நாட்களில் எளிமையாக பாயாசம் தயாரிக்கும் வகையில் பாயாசம் மிக்ஸ் 100 கிராம் ரூ.50/- மற்றும் 200 கிராம் ரூ.100/- என்ற அளவில் தயாரிக்கப்பட்டு அறிமுகப்படுத்தப்படுகிறது. இந்த புதிய பாயாசம் மிக்ஸ் குழந்தைகளை கவரும் வகையில் மிகுந்த சுவையுடன் தயாரிக்கப்பட்டுள்ளது. மேலும், இப்பாயசம் மிக்ஸ் உடல் ஆரோக்கியத்திற்கு தேவையான பாதம், முந்திரி, திராட்சை மற்றும் பால்பவுடர் ஆகிய பொருட்களை கொண்டு சிறந்த முறையில் தயாரிக்கப்பட்டுள்ளது.
பால் புரத நூடுல்ஸ்
வேலைக்கு செல்லும் இல்லத்தரசிகளின் தேவையினை பூர்த்தி செய்யும் வகையிலும் குழந்தைகள் விரும்பி சுவைக்கக்கூடிய பால் புரத சத்து மிகுந்த நூடுல்ஸ் 70 கிராம் ரூ. 10/- என்ற விலையில் அறிமுகப்படுத்தப்படுகிறது.
டெய்ரி ஒய்ட்னர்
அவசர பால் தேவைக்கு உடனடியாக தயாரிக்கும் வகையிலும், உணவகங்கள், தேநீர் கடைகள், விடுதிகள் மற்றும் பெரிய நிறுவனங்களின் தேவையினை கருத்தில் கொண்டும் பயணங்களின் போது எளிதாக எடுத்து செல்லக்கூடிய டெய்ரி ஒய்ட்னர் புத்தம் புது வடிவில், 20 கிராம் ரூ.10/-, 200 கிராம் ரூ.80/- மற்றும் 500 கிராம் ரூ.200/- என்ற விலையில் ஆவின் டெய்ரி ஒய்ட்னர் அறிமுகப்படுத்தப்படுகிறது.
இந்நிகழ்ச்சியில், அமைச்சர்கள் துரைமுருகன், சா.மு.நாசர், கால்நடை பராமரிப்பு கூடுதல் தலைமைச் செயலாளர் தென்காசி சு.ஜவஹர், பால் உற்பத்தி மேம்பாட்டுத் துறை ஆணையர் கோ.பிரகாஷ், ஆவின் மேலாண்மை இயக்குனர் மருத்துவர் ந.சுப்பையன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
-
முதல்வர் மு.க.ஸ்டாலின் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் - ஒருவர் கைது
23 May 2022முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விவகாரம் தொடர்பாக ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
-
ரூ.500 கோடி திட்டங்களுக்கு மத்திய அரசு புதிய கட்டுப்பாடு
23 May 2022புதுடெல்லி : இனி ரூ.500 கோடிக்கு மேல் மதிப்புள்ள உள்கட்டமைப்புத் திட்டங்கள் அனைத்துக்கும் ‘கதிசக்தி’ திட்டத்தின் கீழ் உருவாக் கப்பட்டுள்ள ‘இணைப்புத் திட்டக் குழு’வின் வ
-
புதிய வகை ஒமைக்ரான் தொற்று குறித்து அச்சமடைய வேண்டாம்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்
23 May 2022புதிய வகை ஒமைக்ரான் தொற்று குறித்து அச்சமடைய தேவையில்லை என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
-
வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் அடுத்த 4 நாட்கள் மிதமான மழை பெய்ய வாய்ப்பு
23 May 2022சென்னை : தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
கேரள மாநிலத்தை தொடர்ந்து பெட்ரோல், டீசல் மீதான வாட் வரியை குறைத்தன ராஜஸ்தான், மகாராஷ்டிரா
23 May 2022கேரள மாநிலத்தை தொடர்ந்து பெட்ரோல், டீசல் மீதான வாட் வரியை ராஜஸ்தான், மகாராஷ்டிரா மாநில அரசுகள் குறைத்துள்ளன.
-
விருதுநகரில் பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கு: ஸ்ரீவில்லிபுத்தூர் கோர்ட்டில் 806 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல் சி.பி.சி.ஐ.டி டி.எஸ்.பி தாக்கல் செய்தார்
23 May 2022விருதுநகரில் இளம்பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
-
பெட்ரோல் வரி விகிதத்தில் சில விஷயங்களை மறைத்து பேசுகிறார் : அண்ணாமலை மீது செந்தில்பாலாஜி விமர்சனம்
23 May 2022கரூர் : பெட்ரோல் வரி விகிதத்தில் சில விஷயங்களை மறைத்தும் மறந்தும் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை பேசி வருகிறார். சிலருக்கு புரிதலும் இல்லை.
-
இந்தியாவில் தொழில் தொடங்க வருமாறு அழைப்பு: ஜப்பான் தொழில் துறையினரை சந்தித்து பிரதமர் மோடி பேச்சு
23 May 2022டோக்கியோ : இந்தியாவில் தொழில் தொடங்க வருமாறும், இந்தியாவில் முதலீடு செய்யக்கோரி ஜப்பான் தொழில் துறையினருடன் நேற்று பிரதமர் மோடி பேச்சுவார்த்தை நடத்தினார்.
-
கூட்டணி கட்சிகளால் காங்கிரஸ் கட்சியின் வளர்ச்சி பாதித்துள்ளது : தமிழக காங். தலைவர் கே.எஸ்.அழகிரி பேட்டி
23 May 2022சென்னை : தி.மு.க.வுடன் கூட்டணி வைத்ததால் காங்கிரஸ் வளர்ச்சி பாதித்துள்ளது என்று தெரிவித்துள்ள தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி, தமிழகத்தில் உருவான அரசியல் கூட
-
12 ஆண்டுகளுக்குப்பின் மே 26 முதல் மதுரை-தேனி ரயில் சேவை தொடக்கம்
23 May 2022மதுரை : 12 ஆண்டுகளுக்குப்பின் மே 26 முதல் மதுரை-தேனி இடையே ரயில் சேவை தொடங்கப்பட உள்ளதை அடுத்து மதுரை, தேனி மாவட்ட மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
-
குறுவை சாகுபடிக்கு 3.675 மெ.டன் விதைகள், 56,229 மெ.டன் உரங்கள் இருப்பு வைப்பு : உழவர் நலத்துறை அமைச்சகம் தகவல்
23 May 2022சென்னை : குறுவை சாகுபடி ஆயத்தப் பணிக்காக 3,675 மெட்ரிக் டன் விதைகளும், 56,229 மெட்ரிக் டன் ரசாயன உரங்களும் இருப்பு வைக்கப்பட்டுள்ளதாக உழவர் நலத் துறை அமைச்சகம் தெரிவித்
-
போதிய அளவில் மாணவர் சேர்க்கை இல்லாததால் வரும் கல்வி ஆண்டில் 10 தனியார் இன்ஜினியரிங் கல்லூரிகள் மூடல் : அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு
23 May 2022சென்னை : தமிழகத்தில் வரும் கல்வி ஆண்டில் 10 தனியார் பொறியியல் கல்லூரிகள் மூடப்படும் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
-
கோடை விடுமுறையில் வெளியூர் செல்ல மக்கள் ஆர்வம்: அரசு பஸ்களில் தினமும் 22 ஆயிரம் பேர் முன்பதிவு செய்து பயணம் : ஒரே வாரத்தில் இரு மடங்காக அதிகரித்த பயணிகள் எண்ணிக்கை
23 May 2022சென்னை : கோடை விடுமுறை தொடங்கியதை அடுத்து வெளியூர் மற்றும் சொந்த ஊர் செல்ல மக்கள் ஆர்வம் காட்டுவதால் அரசு விரைவு பேருந்துகளில் தினமும் 22 ஆயிரம் பேர் முன்பதிவு செய்து ப
-
மோட்டார் சைக்கிளில் செல்லும் இருவரும் கட்டாயமாக ஹெல்மெட் அணியும் உத்தரவு அமலுக்கு வந்தது
23 May 2022சென்னை : மோட்டார் சைக்கிளில் ஹெல்மெட் அணியாமல் செல்பவர்களை மடக்கி பிடித்து அபராதம் விதிக்கப்பட உள்ளது.
-
குடிநீர் வாரியத்தில் ஓய்வு பெற்றவர்களுக்கு அகவிலைப்படி உயர்வு வழங்க வேண்டும் : ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்
23 May 2022சென்னை : குடிநீர்வாரியத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்களுக்கு 14 சதவீத அகவிலைப்படி உயர்வு வழங்க வேண்டும் என்றும், அரசுப் போக்குவரத்துக்கழகங்களில் இதுபோன்று வழங்கபடாமல் இ
-
அரசு மருத்துவர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு இன்று முதல் தொடங்குகிறது
23 May 2022சென்னை : அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளில் மருத்துவர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு இன்று(செவ்வாய்க்கிழமை) முதல் 6 நாட்களுக்கு நடைபெறுகிறது.
-
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு சற்று குறைந்தது
23 May 2022சென்னை : தமிழகத்தில் நேற்று முன்தினம் தொற்று பாதிப்பு 43 ஆக பதிவான நிலையில் நேற்று 35 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது.
-
இந்தியாவில் 2,022 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று
23 May 2022புதுடெல்லி : இந்தியாவில் புதிதாக 2,022 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
-
இந்திய அணியில் மீண்டும் இடம்: நீங்கள் உங்களை நம்பினால் போதும் - தினேஷ் கார்த்திக்
23 May 2022நீங்கள் உங்களை நம்பினால் போதும் என்று தினேஷ் கார்த்திக் டுவீட் செய்துள்ளார்.
-
ஐ.பி.எல். இறுதிப் போட்டிக்கு முன்னேறப்போவது யார்? இன்று முதல் பிளே-ஆப் சுற்று: குஜராத் - ராஜஸ்தான் மோதல்
23 May 2022ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டியின் லீக் ஆட்டங்கள் முடிவுக்கு வந்ததையடுத்து இன்று முதல் (மே 24) பிளே ஆஃப் சுற்று ஆட்டங்கள் தொடங்கவுள்ளன.
-
சட்டவிரோத கைது, சிறையில் கொடுமை புகார்: சிறப்பு உரிமை குழு முன்பு ஆஜராகி பெண் எம்.பி நவ்நீத் ராணா விளக்கம்
23 May 2022புதுடெல்லி : சட்டவிரோத கைது மற்றும் சிறையில் கொடுமை புகார் கூறிய பெண் எம்பி நவ்நீத் ராணா, நாடாளுமன்ற சிறப்பு உரிமை குழு முன் நேற்று ஆஜராகி விளக்கம் அளித்தார்.
-
கேரளத்தை உலுக்கிய விஸ்மயா வழக்கில் கணவர் குற்றவாளி : கொல்லம் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு
23 May 2022திருவனந்தபுரம் : கேரளத்தை உலுக்கிய விஸ்மயா வழக்கில் கணவர் குற்றவாளி என கொல்லம் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது.
-
பா.ஜ.க ஆட்சி ஹிட்லர் ஆட்சியை விட மோசமானது : மேற்குவங்க முதல்வர் விமர்சனம்
23 May 2022கொல்கத்தா : மத்தியில் ஆளும் பா.ஜ.க அரசு விசாரணை அமைப்புகளை பயன்படுத்தி மாநிலங்களின் விவகாரங்களில் தலையிட்டு வருகிறது என்று மம்தா பானர்ஜி விமர்சித்துள்ளார்.
-
ஆடுகளத்தில் இலங்கை வீரர் மெண்டிஸுக்கு நெஞ்சு வலி: மருத்துவமனையில் அனுமதி
23 May 2022வங்கதேச கிரிக்கெட் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் களத்தில் ஃபீல்டிங் பணியை கவனித்துக் கொண்டிருந்த இலங்கை அணி வீரர் குசல் மெண்டிஸ் நெஞ்சு வலி காரணமாக மருத்துவமனையில் அ
-
நாளை எலிமினேட்டர் சுற்று: பிளே-ஆப் சுற்றுக்கு முன்னேற உதவிய மும்பைக்கு கோலி நன்றி
23 May 2022பெங்களூரு நாளை நடைபெறும் எலிமினேட்டர் சுற்றில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியை சந்திக்கிறது. இதில் வெற்றி பெறும் அணி 2-வது தகுதிச்சுற்றுக்கு முன்னேறும்.