முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்திய கடற்படை கப்பலில் நிகழ்ந்த வெடிவிபத்தில் 3 பேர் பலி : மும்பை போலீசார் விசாரணை

புதன்கிழமை, 19 ஜனவரி 2022      இந்தியா
Image Unavailable

Source: provided

மும்பை : கடந்த 2021-ம் ஆண்டு முதல் கடலோர பகுதி கண்காணிப்பில் ஐஎன்எஸ் ரன்வீர் என்ற கப்பல் ஈடுபட்டு வருகிறது. நேற்று முன்தினம் இந்த கப்பலின் உள்பகுதியில் வெடிவிபத்து ஏற்பட்டது. இந்த சம்பவத்தில் கப்பலுக்கு அதிக சேதம் ஏற்படவில்லை. இருப்பினும் இந்த விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர்.

இந்நிலையில் தற்போது இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த குழு ஒன்றை கடற்படை நியமித்துள்ளது. மேலும்  இந்த சம்பவம் தொடர்பாக மும்பையில் உள்ள கொலபா காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து