முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரூ.15 கோடி செலவில் குமரி விவேகானந்த கேந்திர வளாகத்தில் அவைக்கூடத்தை கவர்னர் திறந்து வைத்தார்

வியாழக்கிழமை, 20 ஜனவரி 2022      தமிழகம்
Image Unavailable

ரூ.15 கோடி செலவில் கன்னியாக்குமரி விவேகானந்த கேந்திர வளாகத்தில் அவைக்கூடத்தை கவர்னர் ஆர்.என்.ரவி நேற்று திறந்து வைத்தார்.

கன்னியாகுமரி விவேகானந்த கேந்திர வளாகத்தில் ரூ.15 கோடி செலவில் சுவாமி விவேகானந்தா சபாகிரகம் என்ற பெயரில் புதிய அவைக்கூடம் கட்டப்பட்டுஉள்ளது. இதன் திறப்பு விழா நேற்று காலை நடந்தது. நிகழ்ச்சிக்கு அகில பாரத ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன்பகவத் தலைமை தாங்கினார். விவேகானந்த கேந்திர தலைவர் பாலகிருஷ்ணன் முன்னிலை வகித்தார். கேந்திர பொதுச்செயலர் பானுதாஸ் வரவேற்று பேசினார்.

விழாவில் தமிழக கவர்னர் ஆர்.என். ரவி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு புதிதாக கட்டப்பட்டு உள்ள சுவாமி விவேகானந்தா சபாகிரகம் என்ற அவைக்கூடத்தையும் அன்னபூரணா என்ற பெயரில் கட்டப்பட்டு உள்ள உணவருந்தும் கூடத்தையும் திறந்து வைத்து பேசினார்.விழாவில் வெள்ளிமலை விவேகானந்த ஆசிரம தலைவர் சுவாமிசைதன்யானந்த ஜி மகராஜ் ஆசியுரை வழங்கினார். முடிவில் கேந்திர பொதுச்செயலர் பானு தாஸ் நன்றி கூறினார். நிகழ்ச்சியில் முன்னாள் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன், தளவாய் சுந்தரம் எம்.எல்.ஏ. உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியை முடித்து விட்டு கவர்னர் ஆர்.என்.ரவி மற்றும் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் ஆகியோர் பகல் 1-30 மணிக்கு கார் மூலம் தூத்துக்குடி சென்று அங்கிருந்து விமானம் மூலம் சென்னை புறப்பட்டு சென்றனர். தமிழக கவர்னர் ஆர்.என். ரவி மற்றும் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் ஆகியோர் வருகையையொட்டி கன்னியாகுமரியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து