முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பொங்கல் பரிசு பொருட்கள் குறித்த புகார்: முதல்வர் ஸ்டாலின் இன்று ஆலோசனை

வியாழக்கிழமை, 20 ஜனவரி 2022      தமிழகம்
Image Unavailable

பொங்கல் பரிசு பொருட்கள் வழங்கியதில் பல்வேறு புகார்கள் எழுந்தது குறித்து இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்த உள்ளார். இன்று காலை 11 மணிக்கு தலைமை செயலகத்தில், உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி மற்றும் அதிகாரிகளுடன் முதல்வர் ஆலோசனை நடத்துகிறார். 

தமிழகத்தில் 1,297 கோடிக்கு 2.15 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் தொகுப்பு வழங்கப்பட்டது. பொங்கல் பரிசுத் தொகுப்பு கொள்முதல், விநியோகம் தொடர்பாக புகார் எழுந்த நிலையில் உணவுத்துறை அமைச்சருடன் ஆலோசனை நடத்த உள்ளார். பொங்கல் பண்டிகையையொட்டி தமிழகத்தில் உள்ள அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு கரும்புடன் கூடிய 21 பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசுத் தொகுப்பு ரேஷன் கடைகள் மூலம் வழங்கப்பட்டு வருகிறது.

பொங்கல் பண்டிகை முடிவடைந்தாலும், இம்மாதம் இறுதி வரை குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. பல்வேறு சர்ச்சை காரணமாக நேரடியாகச் சென்று நியாயவிலைக் கடைகளில்  முதல்வர் மு.க.ஸ்டாலின்  ஆய்வு செய்ததார். அதேபோல் நியாயவிலைக் கடைகளில் பொங்கல்  பரிசுத் தொகுப்புகளை வழங்கும் பணிகளை, அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட ஆட்சித்தலைவர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட அலுவலர்கள் அனைவரும் தொடர்ந்து கண்காணித்து அனைவருக்கும் தரமான பொங்கல் பரிசுப் பொருள்கள் கிடைப்பதை உறுதிசெய்ய வேண்டும் என்றும் முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி இருந்தார்.  

 

இந்நிலையில் இந்த பொங்கல் தொகுப்பு குறித்து எதிர்கட்சிகள் தவறான புகார்களை பரப்பி வந்தனர். இந்நிலையில் இந்த புகார்கள் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின்  இன்று அமைச்சர் மற்றும் துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து