முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கொரோனா தொற்றால் பெற்றோரை இழந்த 10 ஆயிரம் சிறார்களுக்கு இழப்பீடு வழங்குக: மாநிலங்களுக்கு சுப்ரீ்ம் கோர்ட் உத்தரவு

வியாழக்கிழமை, 20 ஜனவரி 2022      இந்தியா
Image Unavailable

கொரோனாவால் பெற்றோரை இழந்த 10,000 சிறார்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்று மாநிலங்களுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

கொரோனாவில் உயிரிழந் தவர்களின் குடும்பத்தினருக்கு மாநில அரசுகள் சரியாக நிவாரண நிதி வழங்கவில்லை அல்லது கால தாமதம் செய்து வருவதாக பல்வேறு புகார்கள் எழுந்தன. இதுதொடர்பான வழக்கை உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் எம்.ஆர்.ஷா மற்றும் சஞ்சீவ் கன்னா ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது. நீதிபதிகள் தங்கள் உத்தரவில் கூறியிருப்பதாவது:

வருவாய் ஈட்டக் கூடிய முக்கிய நபர் கொரோனா தொற்றால் உயிரிழந்த காரணத்தால், பல குடும்பங்கள் வறுமையின் பிடியில் சிக்கியுள்ளன. அவர்களுக்கு ரூ.50,000 நிவாரண நிதி வழங்குவது அவர்களின் வாழ்வாதாரத்துக்கு உதவியாக இருக்கும். இந்த நிதியை வழங்காமல் இருப்பது அல்லது தாமதம் செய்வதை ஏற்க முடியாது. இந்த விஷயத்தில் நாங்கள் நேரடியாக தலையிட நினைக்கிறோம். ஆந்திராவில் மொத்தம் 36,000 விண்ணப்பங்கள் பெறப்பட்டதாகவும், அவற்றில் 31,000 விண்ணப்பங்கள் மட்டுமே சரியானவை என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், வெறும் 11,000 விண்ணப்ப தாரர்களுக்கு மட்டும் இதுவரை நிவாரண நிதி வழங்கப்பட்டுள்ளது.

பிகாரில் 12,000 பேர் மட்டும் கொரோனாவால் உயிரிழந் துள்ளதாக கூறுவதை ஏற்க முடியாது. உண்மையான உயிரிழப்பு எண்ணிக்கைக்கும் நிவாரணம் கோரி பெறப்பட்ட விண்ணப்பங்களின் எண்ணிக்கைக்கும் நிறைய இடைவெளி உள்ளது. தகுதியுள்ள பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு நிவாரண நிதி வழங்காமல் இருப்பது, இந்த நீதிமன்றம் ஏற்கெனவே பிறப்பித்த உத்தரவுகளை மாநில அரசுகள் மதிக்கவில்லை என்று அர்த்தமாகிறது. அவர்கள் மீது ஏன் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க கூடாது. இதற்கு ஆந்திரா, பிகார் மாநில தலைமை செயலாளர்கள் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும். ஆந்திரா, பிஹார் மாநில அரசுகள் சட்டத்துக்கு மேலானவை கிடையாது. 

கொரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு வழங்க வேண்டிய ரூ.50,000 இழப்பீட்டை, கேரளம், ஆந்திரம், தெலுங்கானா, மகாராஷ்டிரா, ஜார்கண்ட், குஜராத், பீகார் ஆகிய மாநிலங்கள் மிகக் குறைந்த எண்ணிக்கையிலான நபா்களுக்கே வழங்கியுள்ளது கண்டிக்கத்தக்கது.

தேசிய குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் தகவலின்படி, கொரோனா பரவத் தொடங்கிய பிறகு நாடு முழுவதும் கிட்டத்தட்ட 10,000 சிறாரர்கள் தொற்று பாதிப்பு மற்றும் இதர காரணங்களால் பெற்றோரில் ஒருவா் அல்லது இருவரையும் இழந்துள்ளனா். தங்களுக்கான இழப்பீட்டு தொகையை வழங்கக் கோரி விண்ணப்பிப்பது கூட அந்த சிறார்களுக்குக் கடினம்.

இதனால் கொரோனாவால் தாய், தந்தை இருவரையும் இழந்த சிறாரர்கள், தேசிய குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணைய வலைதளத்தில் விவரங்களுடன் இடம்பெற்றுள்ள சிறார்கள் ஆகியோரை அணுகி மாநில அரசுகள் இழப்பீடு வழங்க வேண்டும்.  இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 1 week ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 3 days ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 4 weeks ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 6 months 4 weeks ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 7 months 3 weeks ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து