முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழக அரசின் குடியரசு அலங்கார ஊர்திக்கு பாரதிய ஜனதா வரவேற்பு : மாநில தலைவர் அண்ணாமலை பேட்டி

வெள்ளிக்கிழமை, 21 ஜனவரி 2022      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை : தமிழகத்தில் குடியரசு தினத்தன்று காட்சிபடுத்தப்படும் அலங்கார ஊர்தி தமிழகம் முழுவதும் செல்வதை பா.ஜனதா வரவேற்பதாக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

டெல்லியில் நடைபெறும் குடியரசு தின விழா அணிவகுப்பில் பங்கேற்பதற்காக தமிழகம் சார்பில் அலங்கார ஊர்தி தயார் செய்யப்பட்டது. விடுதலை போராட்ட வீரர்களான வ.உ.சி., வேலு நாச்சியார், பாரதியார், மருது சகோதரர்கள் ஆகியோரது உருவங்கள் அந்த ஊர்தியில் இடம் பெற்றிருந்தது. ஆனால் தேர்வு குழுவால் அந்த ஊர்தி தேர்வு செய்யப்படவில்லை.

இதற்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்பட பலரும் கண்டனம் தெரிவித்தனர். ஆனால் தேர்வு செய்யப்படாதது ஏன் என்பது பற்றி மத்திய அரசு விளக்கம் அளித்தது. இந்த விவாகரத்தை தொடர்ந்து அந்த ஊர்தி சென்னையில் நடைபெறும் குடியரசு தினவிழாவில் காட்சிபடுத்தப்படும் என்றும், அதன் பிறகு மாநிலம் முழுவதும் செல்லும் என்றும் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

மாநிலம் முழுவதும் அலங்கார ஊர்தி செல்வதை பா.ஜனதா வரவேற்றுள்ளது. இது பற்றி பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை கூறியதாவது., தமிழகத்தில் குடியரசு தினத்தன்று காட்சிபடுத்தப்படும் அலங்கார ஊர்தி தமிழகம் முழுவதும் செல்வதை பா.ஜனதா வரவேற்கிறது. முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் வீட்டில் நடத்தப்பட்ட சோதனை என்பது தி.மு.க.வின் இந்த மாத கோட்டா. அவ்வளவு தான். குற்றச்சாட்டுகள் எதுவாக இருந்தாலும் நீதிமன்றத்தில் நிரூபிக்கப்பட வேண்டும். தவறு செய்திருந்தால் நிச்சயம் தண்டனை கிடைக்கும். அதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து