முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கருணாஸ் தயாரித்து நடிக்கும் சல்லியர்கள்

திங்கட்கிழமை, 24 ஜனவரி 2022      சினிமா
Image Unavailable

Source: provided

இலங்கைப் போரை மையப்படுத்தி "சல்லியர்கள்" என்ற படம் உருவாகியுள்ளது.  கருணாஸ் இந்தப்படத்தை தயாரித்து ஒரு முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார். பிரபாகரனின் ஆரம்பகட்ட வாழ்க்கையை மையப்படுத்தி உருவான "மேதகு" படத்தை இயக்கிய இயக்குநர் கிட்டு தான் சல்லியர்கள் என்ற படத்தையும் இயக்கியுள்ளார். போர்க்களத்தில் கூட தமிழர்கள் எவ்வாறு அறம் சார்ந்து செயல்பட்டுள்ளனர் என்பதை மையப்படுத்தி இப்படம் உருவாகியுள்ளது. போர் மருத்துவம் பற்றியும் போர்க்களத்தில் பணியாற்றும் மருத்துவர்கள் பற்றியும் தம் வீரர்கள் மட்டுமல்லாது எதிரி வீரர்களையும் காப்பாற்றி இருக்கும் நமது தமிழ் போர் அறத்தைக் எடுத்து கூறுகிறது இப்படம். சத்யா தேவி டாக்டர் நந்தினியாக முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவரது தந்தையாக கருணாஸும், ஆர்மி வில்லனாக களவாணி திருமுருகனும் டாக்டர் செம்பியனாக மகேந்திரனும் நடித்துள்ளனர். மருத்துவமனை காட்சிகள் இயல்பாக இருக்கவேண்டும் என்பதற்காக மண்ணுக்கு கீழே பதுங்கு குழி தோண்டி மருத்துவ முகாம் அமைத்து அதில் படம் பிடிக்கப்பட்டதாக இயக்குனர் கிட்டு கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து