முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மருத விமர்சனம்

திங்கட்கிழமை, 24 ஜனவரி 2022      சினிமா
Image Unavailable

Source: provided

நாயகனாக GRS, நாயகியாக லவ்லின் சந்திரசேகர் நடித்துள்ள படம் மருத. படத்தின் முக்கிய கதா பாத்திரத்தில் ராதிகா சரத்குமார் நடித்துள்ளார். அவருடன் பருத்திவீரன் சரவணன், விஜி சந்திரசேகர், வேல ராமமூர்த்தி, மாரிமுத்து, கஞ்சா கருப்பு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். கதை; மதுரை அருகே உள்ள ஒரு கிராமத்தில் ஏழ்மை நிலையில் வாழ்ந்து வருபவர் ராதிகா சரத்குமார். இவரது மகன் GRS. அதே கிராமத்தில் வட்டிக்கு பணம் கொடுபவர் விஜி சந்திரசேகர். பல வருடங்களுக்கு முன் விஜியின் கணவர் சரவணன், ராதிகா மகனுக்கு செய்த செய்முறையை திருப்பிக் கொடுக்க முடியாமல் நிலைகுலைந்து போகிறார் ராதிகா. இந்நிலையில், ராதிகாவின் மகனும் விஜியின் மகளும் ஒருவரையொருவர் காதலிக்க, இறுதியில் என்ன நடந்தது என்பது தான் கிளைமாக்ஸ். இயக்குனரே படத்தின் நாயகனாகவும் நடித்து அசத்தியுள்ளார். நாயகியாக லவ்லின் சந்திரசேகர் அருமையான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். படத்தின் மிகப்பெரிய பலம் ராதிகா சரத்குமாரின் அருமையான நடிப்பு தான். ராதிகாவின் நடிப்பு படத்திற்கு பெரிய பலம். அண்ணன் பாசம், பிள்ளை பாசம் என நடிப்பில் பளிச்சிடுகிறார். இவருக்கு இணையாக விஜி சந்திரசேகரும் நடித்துள்ளார். ரமேஷின் ஒளிப்பதிவு கிராமத்து காட்சியை அழகாக கண்முன்னே கொண்டு வந்து நிறுத்துகிறது. Bigway Pictures நிறுவனம் சார்பில் சபாபதி தயாரிக்க இசைஞானி இளையராஜா இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். மொத்தத்தில் ‘மருத’ கிராமத்து கறி விருந்து.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து