முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கடந்த ஆண்டின் சிறந்த கிரிக்கெட் வீராங்கனையாக 'ஸ்மிரிதி' தேர்வு

திங்கட்கிழமை, 24 ஜனவரி 2022      விளையாட்டு
Image Unavailable

ஐசிசி, இந்தியாவின் தொடக்க வீராங்கனை ஸ்மிரிதி மந்தனாவை 2021-ம் ஆண்டின் சிறந்த வீராங்கனையாக தேர்வு செய்துள்ளது.

நான்கு பேரில்... 

ஐ.சி.சி. ஒவ்வொரு வருடமும் சிறப்பாக விளையாடும் வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கு விருது வழங்கி கவுரவித்து வருகிறது. சிறந்த வீராங்கனை விருதுக்கான கடைசி நான்கு பேர் பட்டியலில் இந்திய வீராங்கனை ஸ்மிரிதி மந்தனா இடம் பிடித்திருந்தார்.

இந்தியாவின்...

இந்நிலையில், 2021-ம் ஆண்டின் பெண்கள் கிரிக்கெட்டில் சிறந்த வீராங்கனைக்கான போட்டியில் இந்தியாவின் ஸ்மிரிதி மந்தனா தேர்வு செய்யப்பட்டு உள்ளார். இங்கிலாந்தின் டேமி பியுமோன்ட், தென் ஆப்பிரிக்காவின் லிஜேல் லீ, அயர்லாந்தின் கோபி லீவிஸ் ஆகியோரின் பெயர்களும் பரிந்துரை பட்டியலில் இடம்பெற்றிருந்தது.

855 ரன் சேர்ப்பு...

25 வயதான ஸ்மிரிதி மந்தனா மூன்று வடிவிலான கிரிக்கெட்டிலும் 22 போட்டிகளில் விளையாடி 855 ரன்கள் அடித்துள்ளார். சராசரி 38.86 ஆகும். ஒரு சதம், ஐந்து அரைசதம் அடித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து