முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

குடியரசு தினத்தையொட்டி இந்திய மக்களுக்கு அமெரிக்கா வாழ்த்து

புதன்கிழமை, 26 ஜனவரி 2022      உலகம்
Image Unavailable

Source: provided

வாஷிங்டன் : குடியரசு தினத்தை கௌரவிப்பதில் உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவுடன் நாங்கள் இணைகிறோம் என்று வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் ஜென் சாகி தெரிவித்துள்ளார்.

இந்திய குடியரசு தினத்தையொட்டி இந்திய மக்களுக்கு அமெரிக்கா வாழ்த்து தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக  அமெரிக்க அதிபரின் வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் ஜென் சாகி,கூறியதாவது:-

இந்தியா-அமெரிக்கா கூட்டணி,  ஜனநாயக மதிப்பீடுகளை நிலைநிறுத்துவதில் உறுதியாக உள்ளது. குடியரசு தினத்தை கௌரவிப்பதில் உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவுடன் நாங்கள் இணைகிறோம். 

கடந்த செப்டம்பரில் இந்தியப் பிரதமர் மோடி வெள்ளை மாளிகைக்குச் வந்த போது  இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான உறவு வலுவாகவும், நெருக்கமாகவும், இறுக்கமாகவும் இருக்க வேண்டும் என்று அதிபர் ஜோபைடன் கூறினார். அது முழு உலகிற்கும் பயனளிக்கும் என்றும் ஜோபைடன் குறிப்பிட்டார். இவ்வாறு வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் ஜென் சாகி தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து