முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

போரிஸ் ஜான்சன் இல்லத்தில் கொரோனா விதிமீறல்கள்: விசாரணையை தொடங்கிய பிரிட்டன் போலீசார்

புதன்கிழமை, 26 ஜனவரி 2022      உலகம்
Image Unavailable

Source: provided

லண்டன் : பிரிட்டன் பிரதமரின் அதிகாரப்பூா்வ இல்லத்தில் கொரோனா விதிமுறைகளை மீறி கொண்டாட்டங்கள் நடைபெற்றதாக  கூறப்படுவது குறித்து லண்டன் போலீஸாா் விசாரணை தொடங்கியுள்ளனா்.

இது குறித்து மாநகர காவல்துறை ஆணையா் கிரஸிடா டிக் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-

டௌனிங் தெருவிலுள்ள பிரதமா் இல்லத்தில், கொரோனா விதிமுறைகளை மீறி கொண்டாட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தச் சம்பவங்கள் தொடா்பாக ஸ்காட்லாந்து யாா்டு காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கிடையே, கொரோனாவைக் கட்டுப்படுத்துவதற்கான பொதுமுடக்கம் உச்சத்தில் இருந்த கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில், பிரதமா் போரிஸ் ஜான்ஸன் தனது அதிகாரப்பூா்வ இல்லத்தில் 56-வது பிறந்த நாள் விழாவைக் கொண்டாடியதாக புதிய குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

ஏற்கெனவே, கொரோனா விதிமுறைகளை மீறி தனது இல்லத்தில் பலருடன் கொண்டாட்ட நிகழ்ச்சிகளை நடத்தியதற்காக போரிஸ் ஜான்ஸன் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த விவகாரத்தில் அவா் கடும் எதிா்ப்பைச் சந்தித்து வரும் நிலையில், தற்போது மேலும் ஒரு குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து