முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஊழல் நிறைந்த நாடுகளின் தரவரிசை பட்டியல் வெளியீடு : இந்தியாவுக்கு 85-வது இடம்

புதன்கிழமை, 26 ஜனவரி 2022      உலகம்
Image Unavailable

Source: provided

இஸ்லாமாபாத் : டிரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல் என்ற அரசுசாரா அமைப்பு ஆண்டுதோறும் உலகம் முழுவதும் உள்ள 180 நாடுகளில் ஆய்வு மேற்கொண்டு ஊழல் நிறைந்த நாடுகளின் பட்டியலை வெளியிட்டு வருகிறது. ஆய்வின் அடிப்படையில் 100 மதிப்பெண்களை பெறும் நாடு ஊழலற்ற நாடு என்றும், மதிப்பெண் எதுவும் பெறாமல் இருக்கும் நாடு ஊழல் அதிகமுள்ள நாடு என்றும் வரிசைப்படுத்தப்படுகின்றன.

இந்நிலையில் 2021-ம் ஆண்டுக்கான, உலக நாடுகளின் ஊழல்கள் தரவரிசைப் பட்டியலில் பாகிஸ்தானின் தரவரிசை 16 இடங்கள் சரிந்து 28 மதிபெண்களுடன் 140-வது இடத்துக்கு வந்துள்ளது. 2020-ம் ஆண்டின் பட்டியலில் பாகிஸ்தான் 31 மதிப்பெண்களுடன் 124 இடத்தில் இருந்தது. இந்த பட்டியலில் இந்தியா 40 மதிப்பெண்களுடன் 85-வது இடத்தில் இருக்கிறது. 

கடந்த 2021ம் ஆண்டுக்கான பட்டியலில் அதிகபட்சமாக 88 மதிப்பெண்களுடன் டென்மார்க், பின்லாந்து, நியூசிலாந்து ஆகியவை மிகவும் குறைவாக லஞ்சம் நிலவும் நாடுகள் பட்டியலில் முதலிடங்களில் உள்ளன. மிக அதிக அளவில் லஞ்சம் நிலவும் நாடாக 11 மதிப்பெண்களுடன் தெற்கு சூடான் உள்ளது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து